ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவியாக இருக்கும் பாலமேதை!

Saturday, 29 January 2011

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் ஒன்பது வயதான எம். லாவன்யா ஸ்ரீ என்கிற சிறுமி உலகிலேயே மிகச் சிறிய
வயதை உடைய முதல்தர கணினிப் பொறியியலாளராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு பாலமேதை. இவர் பச்சைக் குழந்தையாக இருக்கும்போதே மிகுந்த மதிநுட்பம் உடையவராக இருந்தார். இவரி பிரமிக்கத்தக்க மதி நுட்பத்தைக் கண்டு பெற்றோர் அதிசயித்தனர். லாவன்யாவுக்கு அப்போது ஒன்றரை வயதுதான் இருந்திருக்கும். லாவன்யாவின் தாய் ஆங்கில அரிச்சுவடியை கற்பித்துக் கொடுத்திருக்கின்றார்.
பிஞ்சுக் குழந்தை சொந்தப் பெயருக்கான எழுத்து வரிசையை துல்லியமாக அடையாளம் காட்டி இருக்கின்றார். தேசிய இலச்சினைகள், பாடல்கள், வடிவங்கள், பழங்கள் ... இப்படி இன்னோரன்ன விடயங்கள் குறித்து சிறுவயதிலேயே கற்கத் தொடங்கி விட்டார். லாவன்யாவின் சகோதரி திருக்குறள் படித்து இருக்கின்றார். அப்போது திருக்குறள் கற்கும் ஆவலை லாவன்யா வெளிப்படுத்தி இருக்கின்றார். 1330 குறள்களையும் மூன்று வயதில் மனப்பாடம் செய்து விட்டார். தற்போது ஒன்பது வயதை அடைந்திருக்கும் லாவன்யா, தொழில் தகைமையுடைய மைக்ரோசொப்ட் சான்றிதழை பெற்றுள்ளார். மிகச் சிறிய வயதை உடைய முதல் தர கணினிப் பொறியாயலாளராக பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி ஒருத்திதான் இருந்திருக்கின்றார்.

0 comments:

Post a Comment