மூன்று குழந்தைகளும் ஒரே ஆஸ்பத்திரியில் தான் பிறந்தன

Monday, 24 January 2011

மெட்றிக்பி மற்றும் லோரி டெய்ஸ்லி ஆகிய தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள். மூன்றாவது குழந்தை கடந்த 20ம் திகதி பிறந்தது.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் மூன்று குழந்தைகளுமே பிறந்த நேரம் தான். முதலதவது குழந்தை 2005 அக்டோபரில், காலை 7.43க்குப் பிறந்தது.

இரண்டாவது குழந்தை 2007 டிசம்பர் 26ல் இரவு 7.43க்குப் பிறந்தது. கடந்த 20ம் திகதி பிறந்த மூன்றாவது குழந்தையும் இரவு 7.43க்கே பிறந்தது.

மூன்று குழந்தைகளும் ஒரே ஆஸ்பத்திரியில் தான் பிறந்தன. குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமனறி பிரசவம் பார்த்த வைத்தியர்கள் மற்றும் மருத்துவச்சி தாதிமார் ஆகியோரும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.முதல் இரண்டு குழந்தைகளும் எதிர்ப்பாராத விதமாக ஒரே நேரத்தில் பிறந்தன. இந்தக்குழந்தை வயிற்றில் இருக்கும் போது இதுவும் அதே நேரத்தில்தான் பிறக்குமோ என்று விளையாட்டாக நாம் பேசிக் கொண்டோம்.

ஆனாலும் கடைசி நேரத்தில் பிரசவ வலியால் எல்லாமே மறந்து போய்விட்டது.

குழந்தை பிறந்தவுடன் நேரத்தைப் பார்த்து குறிக்கின்றபோது தான் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.

ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கமுடியவில்லை என்று தாய் தனது அனுபவத்தை விளக்கினார்.
தந்தை இந்த 7-4-3 ஆகிய இலக்கங்களுக்கும் தனது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக எண்ணி தனது மகிழ்ச்சியை உடம்பில் பச்சை குத்தி வெளிப்படுத்தியுள்ளார்.


300 மில்லியன் அதாவது 30 கோடிக்கு ஒன்று என்ற ரீதியில் தான் இந்த அதிசயம் நிகழும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment