யாழ். பிரதேச செயலகங்களில் தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் பாடுமாறு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் பணிப்பு!

Tuesday, 25 January 2011

யாழ். மாவட்டத்தில் இயங்கும் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் அனைத்திலும் அடுத்தவாரம் தொடக்கம் தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம்பாடி நாட்டின் அபிவிருத்தி பற்றி பதவிநிலை அலுவலர்கள் உரையாற்றிய பின்னரே தமது அலுவலகக் கடமைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலின் போது இத் தீர்மானத்தை எடுத்துள்ளார். அதேநேரம் கடந்த திங்கட் கிழமையிலிருந்து சில பிரதேச செயலகங்களிலும் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் தேசியக் கொடியேற்றி அலுவலக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment