முலையின் விலை 42,150 டொலர்!

Thursday, 20 January 2011

ஒரு பெண்ணின் முலை 42,150 அமெரிக்க டொலர் வரை விலை போய் உள்ளது. மலேசியாவை சேர்ந்த 56 வயதுப் பெண் ரி.செல்வராணி.


இரு பிள்ளைகளில் தாய். இவர் 2005 ஆம் ஆண்டு ஒரு வகையான வயிற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார். Raja Permaisuri Bainun hospital என்கிற வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்று உள்ளார்.

இவருக்கு மார்பு புற்றுநோய் என்று சொல்லி இருக்கின்றனர். ஒரு முலையை சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றி விட்டனர்.

ஆனால் இவருக்கு உண்மையில் மார்புப் புற்று நோய் கிடையாது என்று பின்னர் மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இப்பெண் Raja Permaisuri Bainun வைத்தியசாலையின் முகாமையாளரான Dr L. Vasu Pillai , மலேசிய அரசு, மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தார்.

அந்நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்றில் இவ்வழக்கு சில நாட்களுக்கு முன் இடம்பெற்றது.

வழக்காளி மற்றும் எதிராளி தரப்பினர் இணக்கப்பாட்டுக்கு வந்தனர். வைத்தியசாலையின் முகாமையாளர் 42,150 டொலர் நட்டஈடு கொடுக்க சம்மதித்தார். இதற்கு செல்வராணியும் இணங்கினார்.

1 comments:

பாவம் ... தவறான வைத்தியம்.. மலேசியவிலுமா... ? எல்லா டாக்டருங்களும் ஒரே மாதிரித்தான் போல...!

Post a Comment