கைவிட்ட பாபர் மசூதி சம்பவம்!

Tuesday, 25 January 2011

ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. அதிலும் தனது ‘மன்மதன் அம்பு’ பாடலுக்கு கிடைத்த ‘மரியாதை’ அவரை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது போலிருக்கிறது. ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’க்குப் பிறகு தானே இயக்கப் போகும் தனது அடுத்த படத்தின் கதைக்களமாக கமல் தேர்வு செய்தது பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மற்றும் அதன் பின் விளைவுகளைத்தான். ஆனால், சர்ச்சைகளைத் தவிர்க்க, இந்தக் கதையைப் படமாக்குவதைத் தவிர்த்தேன் என்று அவர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கான கதை விவாதமெல்லாம் முடிந்த நிலையில், இப்படியொரு படம் எடுத்தால் ஏற்படப் போகும் விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் கலாட்டாக்களை நினைத்து கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி கமல் கூறுகையில், “பாபர் மசூதி கதை பலத்த சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று கருதி அப்படம் எடுப்பதை கைவிட்டு விட்டேன் அதற்காக நான் பயந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை…”, என்றார்.

0 comments:

Post a Comment