அழகு சாதனப் பொருட்கள்

Saturday, 22 January 2011

சில வகை கிறிம்களில் பயன்படுத்தப்படும் இரசயான பொருட்கள் உடலுக்கு தீங்களை ஏற்படுத்தக் கூடியதென சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எஸ்பெஸ்டோஸ்
தகரங்களில் காணப்படும் துகள்களில் ஏற்படக் கூடிய பாதிப்பைப் போன்றே, சில வகைக் கிறீம்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மூலப்பொருட்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டைடானியம் டையோக்சயிட் என்ற இரசயான பொருள் அநேகமான கிறீம் வகைகளில் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சூரிய கதிர்களிலிருந்து தோளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் கிறீம் வகைகளில் இந்தப் பதார்த்தம் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விட்டமின் உணவு, பெயின் வகைகள், அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களில் இந்த இரசாயனப் பதார்த்தம் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

0 comments:

Post a Comment