ஈழக்கோரிக்கைக்கு ஆதரவளிக்க தயார்

Tuesday, 25 January 2011

தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதனை நிரூபித்தால் தாமும் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கத் தயார்
. நாம் தமிழ் மக்களை நேசிக்கின்றோம். இவ்வாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய அதிகாரங்கள் வழங்கப்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனத்தவருக்கான உரிமைகளுக்கு உரித்துடையவர்கள். தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதனை நிரூபித்தால் தாமும் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கத் தயார். தமிழ் மக்கள் உரிமைகளைக் கோரிய போதிலும் என்ன காரணத்திற்காக உரிமைகள் கோரப்படுகின்றன என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை. சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதல் இன்றி அரசாங்கங்களின் ஊடாக தமிழ்த் தலைவர்கள் தமது நோக்கங்களை அடைய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment