சர்வதேச கண்காட்சி

Monday, 24 January 2011

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு பற்றும் சர்வதேச கண்காட்சி கடந்த வெள்ளியன்று ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெற்றது.
ஆரம்பமான இக்கண்காட்சியை யாழ்.சுப்பிரமணியம் பூங்காவிற்கு எதிரே இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆரம்பித்து வைத்தார்.

வியாபாரத்திற்கான உங்களின் திறவு கோல் என்ற தொனிப்பொருளிலில்

இந்திய நேபாள இந்தோனேசிய நிறுவனங்களுடன் உள்ளுர் மற்றும் தென்பகுதியைச்சேர்ந்த 50 இற்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ்.அரச அதிபர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் உள்ளுர் வெளியூர் வர்த்தக நிறுவனங்களின் பிரதி நிதிகள் வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். பொதுமக்களும் ஏராளமாக பங்குபற்றினர்.

0 comments:

Post a Comment