அச்சமூட்டும் பிராணிகளுடன் வாழ்ந்துவரும் அதிசய மனிதன்..!

Saturday, 29 January 2011

இராட்சத முதலை, இரு பாம்புகள் மற்றும் குரங்கு என்பவற்றுடன் நபரொருவர் வசிக்கும் அதிசய சம்பவம் ஈரானிய தெஹ்ரான் நகரில் இடம்பெற்றுள்ளது. அமீர் ரஹ்பா (37 வயது) என்ற மேற்படி நபர், ஈரானிய தலைநகரிலுள்ள மாடிக் கட்டிடமொன்றிலுள்ள 20 சதுர மீற்றர் அளவான சிறிய குடியிருப்பில் அச்சமூட்டும் பிராணிகள் சகிதம் வாழ்ந்து வருகிறார். பிராணிகளுடன் பழகுவதற்கு அஞ்சும் நடிகர்களுக்கு பயிற்சியளித்து அவர்களின் அச்சத்தை அகற்றுவதை தொழிலாகக் கொண்டுள்ள அமீர் ரஹ்பா விபரிக்கையில், ““இந்த மிருகங்கள் எனது பிள்ளைகளாகும். அவை எனது குடும்பமாகும். இந்தப் பிராணிகளே என்னை உலகில் பிரபலப்படுத்தி எனக்கு ஒரு தொழிலையும் பெற்றுத் தந்துள்ளன” என்று கூறினார். எனினும் அச்சமூட்டும் மிருகங்களுடன் நட்புறவுடன் பழகுவதை கண்டு அயல் வீட்டுக்காரர்கள் செய்த முறைப் பாடுகளால் வருடத்துக்கு இரண்டு அல்லது 3 தடவைகள் வீதம் வீட்டை மாற்றிக் கொள்ள நேர்ந்ததாக அவர் தெரிவித்தார். முதலை, பாம்பு மற்றும் குரங்குக்கு மேலதிகமாக நாய்கள், ஓநாய்கள் போன்ற பிராணிகளை ரஹ்பா தலைநகருக்கு வெளியேயுள்ள தனது பண்ணை நிலத்தில் வளர்த்து வருகிறார். இந்த நாய்களும் ஓநாய்களும் பல திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment