
எனவே தான் இந்த வங்கிகளிலேயே பணத்தை போட்டு வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் தங்கள் கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர்.
இந்த வகையில் இந்தியர்களின் ரூ.72 ஆயிரம் லட்சம் கோடி பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தியர்கள் அதிகம் டெபாசிட் செய்துள்ள வங்கிகளில் �ஜுலியஸ் போ� என்ற வங்கியும் ஒன்று.
இந்த வங்கியின் முன்னாள் ஊழியர் ருடால் எல்மர். அவர் "ஜுலியல் போ" வங்கியில் ரகசிய கணக்கு வைத்து இருந்த 2 ஆயிரம் பேர் பட்டியலை உலக ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளத்துக்கு வழங்கி உள்ளனர். அதில் ஏராளமான இந்திய அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
அதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பணம் போட்டு வைத்து இருக்கும் தகவலும் உள்ளது. அதில் 2 கணக்குகள் தனிப்பட்ட நிறுவனங்கள் பெயரில் உள்ளன. மற்ற 2 கணக்குகள் தனிப்பட்ட 2 நபர்கள் பெயர்களில் உள்ளன.
ஒரு நிறுவனம் ரூ.400 கோடியும், இன்னொரு நிறுவனம் ரூ.45 கோடியும் டெபாசிட் செய்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் யாருடையது என்ற தகவல் சரியாக வெளியாகவில்லை. தமிழக அரசியல்வாதிகள் தொழில் நிறுவனங்கள் பெயரில் இந்த பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
ருடால் எல்மர் கொடுத்துள்ள 2 ஆயிரம் பேர் பட்டியலில் சிலருடைய பெயர் மட்டுமே தற்போது வெளிவந்து உள்ளது. விரைவில் 2 ஆயிரம் பேர் பெயரையும் விக்கி லீக் இணையதளம் வெளியிட முடிவு செய்துள்ளது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment