அரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை

Tuesday, 25 January 2011

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும்
பெண் ஊழியர்கள் சேலை அணிந்தே கடமைக்கு வரவேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் பணிக்கப்பட்டுள்ளது.
பெண் அரச ஊழியர்கள் அலுவலக கடமை நேரங்களில் பஞ்சாபி அல்லது சுடிதார் அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டை மற்றும் குட்டைப் பாவாடைகளை அணியக்கூடாது என்ற தடை ஏற்கனவே இருந்து வருகிறது.
கடந்த வாரம் யாழ். செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலில் பெண் ஊழியர்களை சேலை அணிந்து கடமைக்குவர பணிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது
இதன் தொடர்ச்சியாக பிரதேச செயலகங்களுக்கு கடமைக்க வரும் பெண் ஊழியர்கள் சேலை அணிந்து வர வேண்டும் என பிரதேச செயலாளாகள் உதவி அரசாங்க அதிபர்களினால் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment