15 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு:

Tuesday, 25 January 2011

இலங்கை ஊடாக பாங்கொக்குக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கொக்கைன்
என்ற போதைப் பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் இந்தியப் பிரஜை ஒருவரினால் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தப் போதைப் பொருள் பாங்கொக்குக்குக் கடத்தப்படவிருந்த நிலையிலே இதனை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர் என விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பத்து கிலோ கிராம் நிறை கொண்ட இந்தப் போதைப் பொருளின் இலங்கைப் பெறுமதி 15 கோடி ரூபா எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.