ரஜினியின் அடுத்தபட ஜோடி

Friday, 28 January 2011

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக, இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிப்பார் என்று கூறப்படுகிறது
. சன் பிக்சர்ஸ் தயாரித்து மெகா ஹிட்டான �எந்திரன்� படத்தை அடுத்து, புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இதில் ரஜினி இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். அவர் ஜோடியாக நடிக்க, இந்தி நடிகை தீபிகா படுகோனிடம் பேசியுள்ளனர்.

சமீபத்தில் தீபிகா, இந்தப் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து பேசியுள்ளார். இதுபற்றி தீபிகாவிடம் கேட்டபோது, �ரஜினியுடன் நடிக்க என்னை கேட்டதையே பெருமையாக நினைக்கிறேன்� என்றார். தீபிகாவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, �படத்தின் கேரக்டருக்கு தீபிகாதான் பொருத்தமாக இருப்பார் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தீபிகா இந்த வருடம் முழுவதும் பிசியாக இருக்கிறார். இருந்தாலும் கால்ஷீட்டை சரிபடுத்தி நடிக்க முயற்சித்து வருகிறார். ரஜினியுடன் நடிக்கும் இந்த வாய்ப்பை தவறவிட்டால் இன்னொரு முறை கிடைப்பது கஷ்டம் என்பதால் அதற்கான முயற்சியில் தீபிகா ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment