ஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் வாழும் காதல் ஜோடி

Saturday, 29 January 2011

ஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் நபரொருவரும் அவரது காதலியும் வாழ்ந்து வரும் அதிசய சம்பவம் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள ஸ்ரூடியோ சிற்றியில் இடம் பெற்றுள்ளது.


போல் பொண்டெல்லா என்ற மேற்படி நபர், இசைக்கேற்ப தன்னுடன் நடனமாட அந்த ஓநாய்களில் ஒன்றுக்கு பயிற்சியளித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தும் ஓநாய்களுக்கு வீட்டின் வரவேற்பறையிலுள்ள கதிரைகளில் படுத்துறங்கவும் அனைத்து அறைகளிலும் சுதந்திரமாக நடமாடவும் தோட்டத்தில் விளையாடவும் போல் பொண்டெல்லாவும் அவரது காதலியான கொலெட்டுவாலும் அனுமதித்துள்ளனர்.


அத்துடன் போல் இந்த உயிராபத்து மிக்கஓநாய்களை கட்டியணைத்து முத்த மிடுகையில் அவை சாந்தமாக ஒத்துழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஓநாய்களை சாந்தமான பிராணிகளாக மாற்ற தொடர்ந்து பல நாட்கள் பல மணி நேர பயிற்சி வழங்க நேர்ந்ததாக போல் கூறினார்.
ஓநாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போல் விபரிக்கையில், முதன் முதலாக சடோ என்ற ஓநாய் குட்டியை கண்டுபிடித்து வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும், அது தங்களுடன் அன்புடன் பழக ஆரம்பித்ததையடுத்து அதற்கு துணை யாக அலைஸ், தகோடா என்ற புதிய ஓநாய்களை கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தாகவும் தெரிவி த்தார்.

0 comments:

Post a Comment