ஆனந்த சங்கரியின் காலைப் பிடித்திருக்கும் கூட்டமைப்பு!

Saturday, 29 January 2011

மூத்த தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரான வீ. ஆனந்தசங்கரி
யின் தலைமையில் இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் சரண் அடைந்து உள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகள் உள்ளன. பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய பிரதேச சபைகளே அவை. ஆயினும் பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிட கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இவ்வேட்பு மனுக்களில் சமாதான நீதிவானின் கையொப்பங்கள் இடம்பெற்று இருக்கவில்லை.

கரைச்சி பிரதேச சபைக்கான வேட்பு மனு மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மூன்று பிரதேச சபைகளுக்கும் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்கு ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.

கடந்த காலங்களில் வீ.ஆனந்தசங்கரியை அவமதிக்கும் விதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டது.

ஆயினும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடம்கொடுத்து அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தி உள்ளார்.