இந்தியாவுக்கான வீசாக்கள் விநியோகம்

Thursday, 20 January 2011

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ள இந்திய தூதுவராலயக் காரியாலயத்தின் ஊடாக தற்போது இந்தியாவுக்கான வீசாக்கள் விநியோகிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதுவராலய
அதிகாரி வீ . மகாலிங்கம், TPNக்கு இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
சட்ட மற்றும் மனிதவளங்களின் சிக்கல்களுக்கு மத்தியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவரின் தகவல்படி  வீசா வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இந்த காரியாலயம் மூலம் நாளாந்தம் 50 தொடக்கம் 100 வரையான வீசாக்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக வீசா வழங்கும் நடைமுறையே இங்கும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரியின் விபரங்கள், கொழும்பில் உள்ள இந்திய தூதுவராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, கடவுச் சீட்டு உண்மை தன்மை தொடர்பில் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீசா வழங்கப்படும் என மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த பணிகளுக்காக இந்தியாவில் இருந்து விசேட மென்பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மென்பொருட்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காரியாலயத்தின் ஊடாக,  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான சேவைகள் வழங்கப்படவுள்ளன.

0 comments:

Post a Comment