உலகில் மிக கூடிய வயதில் தகப்பனாகி இருக்கும் சாதனையை 94 வயது உடைய இந்திய தொழிலாளி ஒருவர் நிலைநாட்டி உள்ளார். இவரின் பெயர் ராமஜித் ராகவ்.
 |
வட இந்தியாவில் உள்ள ஹர்யானா மாநிலத்தில் வசிக்கின்றார்.
அங்கு விவசாயப் பண்ணை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார். |
 |
இவரது மனைவி சகுந்தலா. இவருக்கு வயது 53 வரை இருக்கும். கடந்த மாதம் அரச வைத்தியசாலையில் சகுந்தலா ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்து உள்ளார். சாதாரண சுகப் பிரசவம்தான். குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.இக்குழந்தை கடவுளின் அருட்கொடை என்று பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைக்கு கரம்ஜித் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சொந்தமாக இரண்டு பசுக்கள் உள்ளன. ஓய்வூதியம் பெறுகின்றனர். நாட்கூலிக்கு வேலை செய்கின்றார்கள். |
 |
வேறு வாழ்வாதாரம் கிடையாது. ராகவ்வின் சொந்த இடம் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் உள்ள பெக்வூர் என்கிற கிராமம். குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் சொந்த ஊரை விட்டு வெளியேறினார்.
ஆரம்பத்தில் இவர் வீடுகளில் உதவியாளாக வேலை பார்த்தார். கடந்த 22 வருடங்களாக தற்போதைய விவசாயப் பண்ணையில்தான் வேலை பார்க்கின்றார். இவர் இளமைக் காலத்தில் ஒரு பயில்வானாக இருந்துள்ளார்.
அந்நாட்களில் நாளாந்தம் மூன்று கிலோகிராம் நிறையுடைய பால், அரைக் கிலோகிராம் பாதாம் பருப்பு, அரைக் கிலோ வெண்ணெய் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட்டு வந்து இருக்கின்றார். இதுவே நீண்ட ஆயுளின் இரகசியம் என்கின்றார். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நானு ராம் என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு 90 வயதில் 22 ஆவது குழந்தைக்கு தந்தையாகி இருந்தார்.
இவரது சாதனையைமுறியடித்தே அதிக வயதில் தந்தை ஆனவர் என்கிற பெருமைக்கு ராகவ் சொந்தக்காரர் ஆகி உள்ளார். |
0 comments:
Post a Comment