ஜீன்ஸ் என்பதா ஜட்டி என்பதா இரண்டின் மத்தியில் இன்னோர் ஆடையா ?

Thursday, 27 January 2011

கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க ஜீன்ஸ் பேண்ட் கீழே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம், அதை ஈடுகட்டும் விதமாக பிரேசில் நாட்டில் உருவாகியிருக்கிறது ஜீன்ஸ் + உள்ளாடை.

ஸாண்ட்ரா டனிமூரா – இந்த ஆடையை வடிவமைத்தவர் இதன் அருமை பெருமைகளை அடுக்கினார்
நன்றாக கீழிறங்கியபடி இருக்கும் ஜீன்ஸ்களையே பெண்கள் பெரிதும் விரும்பியதாகவும், ஆனால் அப்படிப்பட்ட ஆடைகள் தயாராக்கும் போது அவை உடனே கீழே இறங்கி தரையில் விழுந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டும் என யோசனையில், ஜீன்ஸ்க்குக் கீழே அமர்ந்து தியானம் செய்த அவருக்கு, ஆப்பிள் விழுந்தபோது புவீஈர்ப்பு விசையைப் புரிந்து கொண்ட ஐசக் போல ஜீன்ஸ் விழுந்தபோது புதிய விதி புலப்பட்டதாம்.
அதாவது உள்ளாடையுடன் கூடிய ஜீன்ஸ் வடிவமைத்தால் ஜீன்ஸ் விழாது. (அப்படியே விழுந்தா இரண்டும் சேர்ந்து தானே விழும்) என கண்டுபிடித்து உற்சாகத்துடன் புதிய ஆடையை அறிமுகமும் செய்தி விட்டார்.
இந்த ஆடை ஜீன்ஸ் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என அவர் புளகாங்கிதம் அடைய, இருக்கும் கொஞ்ச நஞ்ச கலாச்சார மிச்சமும் கழுவப்பட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கின்றனர் கலாச்சாரவாதிகள்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தயாராகிக்கொண்டிருக்கின்றன இந்த ஆடைகள்.
ஜீன்ஸ் என்பதா
ஜட்டி என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் ஆடையா ?
- என ஏதோ ஒரு கவிஞர் கவிதை எழுதிக் கொண்டிருப்பதாக கேள்வி

0 comments:

Post a Comment