எச்சரிக்கை விடுக்கும் ஒசாமா பின்லாடன்

Tuesday, 25 January 2011

தனது படைகளை இஸ்லாமிய நாடுகளிலிருந்து வெளியேற்றாவிடின், பணயக்கைதிகளை படுகொலை செய்ய நேரிடும் என
அல்கைதா தலைவர் ஒசாமா பின்லாடன், பிரான்ஸிற்கு எச்சரித்துள்ளார்.இது தொடர்பில் அல்கைதாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒலிநாடா ஒன்றை அல்ஜசீரா ஒலிபரப்பியுள்ளது.
ஒசாமா பின்லாடன் குரலில் பேசப்பட்டுள்ள அவ் ஒலிநாடாவில் மேலும் :
நைகரில் வைத்து பணயக்கைதிகளாக பிடிபட்ட பிரான்ஸ் நாட்டு பிரஜைகளை விடுவிக்க வேண்டுமாயின், பிரெஞ்சு படைகள் ஆப்கானிலிருந்து வெளியேற வேண்டும். தமது யுத்த கொள்கையை பிரான்ஸ் அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோசஸி இதனை நிராகரிக்கலாம். ஆனால் அது, பணயக்கைதிகளை கொல்வதற்கு அவர் வழங்கும் பச்சை சமிக்ஞை ஆகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பரில், அல்கைதாவின் வட - ஆபிரிக்க கிளைக்குழுவினரால், நைகரில் வைத்து 5 பிரெஞ்சு நாட்டவர்கள் உட்பட 7 வெளிநாட்டவர்கள் கடத்தப்பட்டிருந்தனர். அல்குவைதா இஸ்லாமிய மக்ஹ்ரெப் எனும் அமைப்பு இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது.
கடந்த வாரம், இவர்களை மீட்பதற்கு நடந்த இராணுவ முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், இதனால் கோபமுற்ற அல்கைதா குழுவினர் இரு பிரெஞ்சு நாட்டவர்களை படுகொலை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment