குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்

Tuesday, 25 January 2011


குழந்தையொன்றுக்கு ஏற்பட்ட பக்கவாத நோயை குணப்படுத்துவதற்கு தேவைப்பட்ட பணத்தை சேகரிப்பதற்காக
போலந்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பலர் நிர்வாணமாக நின்று கலண்டர் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

இச்சிகிச்சைக்காக உண்டியல் குலுக்கி பணம் சேகரிக்க அவர்கள் விரும்பவில்லை. மாறாக கண்களுக்கு விருந்தளிக்கும் கலெண்டருக்கு காட்சிக் கொடுப்பதனூடாக சுமர் 13 லட்சம் ரூபா பணத்தை சேகரிப்பதற்கு தயாராகினர்.

இப்பணமானது ஜூலியா கோபர் என்ற 4 வயது குழந்தை மீண்டும் நடப்பதற்கு உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலந்தில் உள்ள அந்த 4 வயதுக் குழந்தையின் நோயை குணப்படுத்த விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த சிகிச்சைக்குப் போதிய பணம் திரட்ட முடியாமல் அக்குழந்தையின் குடும்பத்தினர் தவித்துக்கொண்டிருந்தபோது, அக்குழந்தையின் உறவினரான ஈவா மார்சினிக் எனும் 38 வயதான பெண், இக் கலெண்டர் குறித்த யோசனையை தெரிவித்துள்ளார்.

'நான் எனது தோழிகளுக்கு இந்தக் பிள்ளையின் நிலைமைக் குறித்துக் கூறினேன். கட்டாமயாக அந்தக் குழந்தைக்கு உதவவேண்டும் என்று தீர்மானித்தோம். நாங்கள் மலர்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை உள்ளடக்கிய கலண்டர்களை தயாரிக்கலாம்.

ஆனால், நிர்வாண நிலையில் நிற்கும் கலெண்டர்கள் அதிகமாக விற்கக்கூடியது. எனவே அந்த சங்கடங்களை மீறி, அந்த நோயுற்ற குழந்தைக்கு உதவ நினைத்தோம்' என அவர் விபரித்துள்ளார்.

0 comments:

Post a Comment