தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது

Sunday, 23 January 2011

பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.

மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.

பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

ஆனால் இதே தூசு மண்டலம்தான் மேகத்தின் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு மழையை தடுத்து இதன் மூலம் கடும் வறட்சி ஏற்பட்டு இதனால் இந்த புதிய வறட்சியால் மேலும் தூசிகள் விண்வெளிக்குச் செல்லும் ஆபத்தும் உள்ளது.

0 comments:

Post a Comment