இணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம் பேர் தூக்கத்தை இழக்கின்றனர்.

Monday 24 January 2011

இணையதளத்தில் தொடர்ந்து உட்கார்ந்து பொழுது போக்குவது என்பது இளைஞர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால், அப்படி செய்வது மன அழுத்தத்தை கொடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். பியரி ஆன்ட்ரூ மிசௌட் மற்றும் இவரது குழுவினர் இது தொடர்பான ஆய்வு நடத்தினர்.

16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 7,200 வாலிபர்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.
ஆய்வில், ‘தினமும் 2 மணி நேரத்திற்கு மேலாக இணையதளம் பயன்படுத்தினால் அது அதிக இணையதள பயன்பாடு. வாரம் முழுவதும் தினமும் 2 மணி நேரம் என்ற அளவில் பயன்டுத்தினால் அது வழக்கமான பயன்பாடு. வழக்கமான பயன்பாட்டில் இருப்பவர்களை காட்டிலும் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் அல்லது பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். ஆண்களில் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் 3ல் 1 பங்கினர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெண்களில் அதிகம் பயன்படுத்துபவர்களில் 86 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இணையதளம் அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு உடல் ரீதியாக சில குறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக இணையதள பயன்பாட்டாளர்களில் 18 சதவீதம் பேர் உடல் பருமனானவர்கள். இது வழக்கமான பயன்பாட்டாளர்களில் 12 சதவீதமாக உள்ளது. இணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம் பேர் தூக்கத்தை இழக்கின்றனர். இவர்கள் இப்படி மதிப்பிட, இணையதளமே பயன்படுத்தாதவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களாக கருதப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment