தமிழ்பெண்கள் இருவர் லண்டனில் பலி

Saturday, 5 February 2011

லண்டன் டெப்ஃபேட் என்னும் இடத்தில் 16 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீபற்றியது. அதில் கடைசிமாடியில் வசித்துவந்த தமிழீழத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையைச் சேர்ந்த தர்மலிங்கம் சந்திராவதி மற்றும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அழகரத்தினம் ரஞ்சிதாதேவி ஆகியேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத் தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சுமார் 55 தீயணைப்பு படையினர் போராடியுள்ளனர். அத்தோடு கடைசி மாடியில் இத் தீ பற்றிக்கொண்டதால் தீயணைக்கும் படையினருக்கு இது ஒரு பெரும் சவாலாகவும் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்தனர். அவசர முதலுதவிகளின் பின்னர் படுகாயமடைந்த மற்றுமொரு வன்னிப்பிரதேசப் பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயினுள்ள சிக்கியிருந்த 6 பேரை மீட்டுள்ள லண்டன் தீயணைக்கும் படையினர், அந்தக் கட்டிடத்தில் இருந்து 35 பேரைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளதாகவும் மனிதன் இணையம் அறிகிறது.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றபோதிலும். இது நாச வேலையாக இருக்கலாமோ என்பதைக் கண்டறிவதற்காக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக லண்டன் பொலிசார் மேற்படி கூறியுள்ளனர்

0 comments:

Post a Comment