பாட்டியின் 38 வயது கணவர்

Friday, 25 February 2011

மலேசியாவை சேர்ந்தவர் வூக் குன்டோர். இவருக்கு வயது 108. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் இவரை விட 70 வயது இளையவர். அவருக்கு வயது 38 தான். அவர் பெயர் முகமது நூர் சே முசா. இவர்கள் திருமணம் 2006-ம் ஆண்டு நடந்த போது, அது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகமது கடந்த ஆண்டு தன் மனைவியை விட்டு பிரிந்து விட்டார். அவர் போதை பொருள் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கோலாலம்பூருக்கு சென்று இருந்தார். சிகிச்சை முடிந்ததும், அவர் மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்து விட்டார். கடந்த வியாழக்கிழமை அவர் தன் மனைவியுடன் சேர்ந்து விட்டார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த வூக், என் கணவர் திரும்பி வந்து சேர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழப் போகிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் அவரை பெரிதும் காதலிக்கிறேன் என்று 108 வயது வூக் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment