பிரிட்டனின் டீன் ஏஜ் குண்டு யுவதி

Wednesday, 23 February 2011

இவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜோர்ஜியா டேவிஸ். வயது 17. எடை 566 இறாத்தல். பிரிட்டனின் எடை கூடிய டீன் ஏஜ் யுவதி இவர்தான்.
அமெரிக்காவில் இடம்பெற்ற எடை குறைப்பு முகாமில் கலந்து கொண்டு சற்று எடையைக் குறைத்தார். ஆனால் எல்லாம் கொஞ்ச காலம்தான்.

மீண்டும் கிடுகிடு என்று எடை ஏறிவிட்டது. இவர் எடை கூடியதைப் பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை. இன்னும் நிறைய சாப்பிடவேண்டும் என்று ஆசையாம்.
ஆனால் சாப்பிட முடியவில்லையாம். அதுதான் இவரின் கவலை. இவர் பெரும்பாலும் வெளியில் எங்கும் போவதில்லை. வீட்டில் தாய்க்கு ஒத்தாசையாக இருக்கின்றார்.

காலையில் ஒன்று அல்லது இரண்டு பிளேட் கோர்ன்பிளேக்ஸ், மற்றும் டோஸ்ட் செய்யப்பட்ட உணவுகளுடன் இரண்டு கிளாஸ் கோக். வாரத்துக்கு ஒரு தடவை பஸ்ஸில் அருகிலுள்ள டவுண் வரைப் பயணம் செய்கின்றார்.
பஸ்ஸில் ஏறினால் பல விதமான பார்வைகள், இன்னும் பல விதமான பேச்சுக்கள். ஆனால் இதை எல்லாம் சட்டைசெய்வதே இல்லை. எல்லாம் பழகிப் போய்விட்டதாம்.

மீன் மற்றும் சிப்ஸ்களுடன் பகல் உணவு. வழமையாக இரண்டு போஷன் தேவை. இல்லாவிட்டால் ஆறு சிலைஸ் சென்விச் பான்.மற்றும் கிறிஸ்பிகள். இரவில் பிரதான உணவுடன் பிஸ்கட்டுக்கள் மற்றும் சொக்லேட்டுக்களும் அவசியம்.

இவருக்கு நீரிழிவு நோயும் உள்ளது. இவரது தற்போதைய நிலை நீடித்தால் விரைவில் மரணம் தழுவிக்கொள்ளும் என்ற எச்சரிக்கையையும் மீறி புகைபிடிக்கும் பழக்கத்தைக் கூட இன்னும் விட்டபாடில்லை.

0 comments:

Post a Comment