ஒரே நபரின் ஆறு திருமணங்களை

Thursday, 17 February 2011

ஏழு வருடங்களுக்குள் இந்த ஆறு திருமணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

வலப்பனை பிரதேச விவாகப் பதிவாளர் ஒருவரே குறித்த நபரின் ஆறு திருமணங்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலான அறிக்கையை பிரதேச செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஜூன் மாத்திலும், செப்டம்பர் மாதத்திலும் குறிபிட்ட நபருக்கு இரண்டு திருமணங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

ஒரே நபரைத் திருமணம் செய்த ஆறு பெண்களிளதும் விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

இந்தத் திருமணங்களை பதிவு செய்த விவாகப் பதிவாளரை பணி நீக்கம் செய்யும் ஆவணத்தில் கையொப்பமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலைகல் சிலவற்றில் பணியாற்றிய பெண்கள் ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட நபரை திருமணம் செய்திருக்கலாம் என்ற சநதேகம் எழுந்துள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு 55 வயது பூர்த்தியாக வேண்டும் அல்லது திருமணமாக வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment