பிரசவகாலத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாககூட உடல் உறவு கொள்ள் முடியும்

Thursday, 3 February 2011

"கர்ப்பிணிகள் பொதுவாக உடல் உறவு கொள்ளலாம். இது வயிற்றில் இருக்கும் குழந்தைகளை பாதிக்காது. அடிக்கடி தொடர்ந்து மேற்கொள்ளும் உடல் உறவால் குறைப் பிரசவம் ஏற்படலாம் என்றோ, இதர உபாதைகள் ஏற்பட கூடும் என்றோ அஞ்சத் தேவையில்லை."

இப்படிக் கூறுகின்றது புதிய ஆய்வின் முடிவு ஒன்று.

கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்சொன்ன ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

11,000 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

பிரசவகாலத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாககூட உடல் உறவு கொள்ள் முடியும் - இது ஒரு சாதாரணமான விடயம் என்கின்றனர் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்.

வைத்திய ஆலோசனை இவ்விடயத்தில் தேவை இல்லை என்றும்
முன்கூட்டிய எச்சரிக்கை அநாவசியம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை ஒரே சூலில் பிரசவிப்பவர்களுக்கு அவதானம் தேவை என வலியுறுத்துகிறார்கள்.

அத்துடன் மூன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஒரே சூலில் பிரசவிக்கும் கர்ப்பிணிகள், ஏற்கனவே குறைப் பிரசவங்களுக்கு உரித்தானவர்கள் போன்றோர் இது விடயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றமை நல்லது என்றும் இந்த ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 11 ஆயிரம் பேரில்அரைவாசிக்கு மேற்பட்டோர் உடல்உறவில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அரைவாசிப் பேர் பாலியல் உறவில் நாட்டம் காட்டவில்லை எனினும் பிரசவ த்தில் இரு சாராருக்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் ஏற்பட்டு இருக்கவில்லை எனஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதே வேளை குறைந்த பட்சம் ஒரு குறைப் பிரசவத்துக்கு உள்ளான கர்ப்பிணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்கள் கர்ப்ப காலத்தில் கிரமமாக பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இது பிரசவ காலத்தில் பாதுகாப்பை அதிகரித்து இருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பிரசவத்துக்கு பின்னர் ஒரு மாத அல்லது இரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் பெண்கள் பொதுவாக உடலுறவை ஆரம்பித்து விடுகிறார்கள் எனவும் அவதானிக்கப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment