கலைக் கூடம்- அதுதான் உண்மையின் உறைவிடம்

Saturday, 5 February 2011

புராதன மானிட நாகரிகம், பண்டைய அறிவு, கிழக்குலக தத்துவ ஞானம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் முற்றிலும் தேக்கு மரங்களால் ஆன பிரமாண்டமான கட்டிடம் ஒன்று தாய்லாந்து நாட்டில் எழுந்து வருகின்றது.
இக்கட்டிடம் பார்க்கின்றமைக்கு ஒரு ஆலயம் போலவோ
அல்லது அரச மாளிகை போலவோ தோன்றக் கூடும். ஆனால் உண்மை அது அல்ல.

தாய்லாந்து கட்டிட கலையின் உயரிய நுட்பத்தை இக்கட்டிடம் வெளிப்படுத்துகின்றது என இதை பார்வை இடுகின்ற ஒவ்வொருவரும் நம்புகின்றனர்.புத்தரின் தலைகள், புனிதமான விலங்குகள் போன்றவற்றுடன் சமயங்கள் மற்றும் தத்துவங்கள் சொல்லும் எல்லாவிதமான கருப் பொருட்களையும் கொண்டதாக இக்கட்டிடம் எழுகின்றது.
32 ஏக்கர் காணியில் கட்டப்படுகின்றது.105 மீற்றர் உயரத்துக்கு எழுப்பப்படுகின்றது. கடலைப் பார்த்த வண்ணம் இருக்கின்றது. ஒரு கப்பலைப் போலவும் காட்சி கொடுகின்றது.

தாய்லாந்தில் மிகுதியான செல்வாக்குப் பெற்று இருக்கும் சீனா, இந்தியா, கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமான கலைத்துவ பண்புகள் மற்றும் தத்துவங்கள் ஆகியவற்றை இக்கட்டிடம் வெளிப்படுத்தி நிற்கின்றது.ஒரு பறவையைப் போலவும் தோன்றுகின்றது. பறவையை போன்று காட்சி கொடுக்கும்போது இதற்கு நான்கு இறக்கைகள் இருப்பது போன்று தோன்றும்.

தேச சஞ்சாரியான லிக்லிலியா பாண்ட்டல் என்கிற கோடீஸ்வரரின் அபிலாசையாகதான் இக்கட்டிடம் எழுகின்றது. இவர் இக்கட்டிடத்துக்கு உண்மையின் உறைவிடம் என்று பெயர் சூட்டி இருந்தார்.

இவர் நிர்மாணப் பணிகளை 1981 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.

வெறுமனே தேக்கு மரங்களை கொண்டு கட்டப்படுகின்றமையால் வேலைகள் மிகவும் மெதுவாகவே நகர்கின்றன.இக்கட்டிடத்தில் செதுக்கப்படுகின்ற கலை வேலைப்பாடுகள் மிகவும் அழகானவையாகவும், நேர்த்தியானவையாகவும், கண்களுக்கு விருந்தானவையாகவும் இருக்கின்றன.

மரங்களை குடைந்து மேற்கொள்ளப்படுகின்ற சிற்ப-சித்திர வேலைப்பாடுகள் பார்ப்பவர் மனங்களைக் கொள்ளை கொள்கின்றன. இவ்வேலைப்பாடுகளை நாள்தோறும் 250 மரவேலை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கின்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும்

கட்டிட நிர்மாணம் இன்னமும் நிறைவு அடையாத போதிலும் உல்லாசப் பயணிகள் வகை தொகை இன்றி இங்கு படை எடுக்கத் தொடங்கி உள்ளார்கள்.

0 comments:

Post a Comment