ரெயிலில் இருந்து குதித்தபெண்! ஆஸ்பத்திரியில் அனுமதி

Thursday, 3 February 2011

கேரள மாநிலம் சோர்னூர் அருகே உள்ள மஞ்சகாட் என்ற இடத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளம்-சோர்னூர் பயணிகள் ரெயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த ரெயில் பெட்டியில் வேறு யாரும் இல்லை. சிறிது நேரத்தில் அதே ரெயில் பெட்டியில் வாலிபர் ஒருவரும் ஏறினார். தனிமையில் இருந்த சவுமியாவை திடீரென அந்த வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றார்.

சற்றும் எதிர்பார்க்காத சவுமியா தன்னை காப்பாற்றுமாறு கூச்சல்போட்டார். இறுதியில் அந்த வாலிபரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து சவுமியா குதித்து விட்டார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சவுமியா சுயநினைவு இல்லாமல் ரெயில் தண்டவாளம் அருகே விழுந்து கிடந்தார்.

அவரை ரெயில்வே ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment