ஆபாசமாக போஸ்! பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு

Thursday, 3 February 2011

புத்தகத்துக்கு ஆபாசமாக போஸ் கொடுத்ததாக இந்தி நடிகை பிபாஷா பாசு மீது லக்னோ கோர்ட்டில் புகார்
கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு மீது லக்னோ மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் நிசார் முகமது புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ஜனவரி மாத மேக்சிம்' புத்தகத்தில் பிபாஷா பாசுவின் படம் மிகவும் ஆபாசமாக பிரசுரமாகியுள்ளது.

அந்த புத்தகத்தை பார்த்த என் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆத்திரம் அடைந்து அந்த புத்தகத்தை தூக்கி எறியும்படி கூறினார்கள்.

ஆகவே ஆபாசமாக போஸ் கொடுத்த பிபாஷா பாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை மாஜிஸ்திரேட்டு ஆர்.ஜி.சிங் இந்த மனு மீது வருகிற 15ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.


1 comments:

விசாரிக்கட்டும்.. அன்றாவது நல்லமாதிரி வருவாங்களா.. பகிர்வுக்கு நன்றி

Post a Comment