கனடாவுக்குள் தாய், தந்தை வர முடியாத அவலம்

Tuesday, 15 February 2011

கனடாவில் குடியேறியவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை அழைப்பதற்கான விசா எண்ணிக்கையை குறைப்பது என கனடா தேசிய அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த முடிவால் கனடாவில் குடியேறியவர்கள், தங்களது பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் மீண்டும் இணைவது
குறித்த விசாக்கள் 16 ஆயிரம் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு 11 ஆயிரம் விசாக்களை மட்டும் அனுமதிப்பது என கனடா குடியரசு முடிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டை விட காட்டிலும் 5 ஆயிரம் விசாக்கள் குறைக்கப்படுவதால் தங்களது பிள்ளைகளுடன் பெற்றோர் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவில் வசிக்கும் ஒரு நபர் அஸ்மத்கான். கான் கடந்த 1994 ம் ஆண்டு கனடாவுக்கு குடியேறினார். இவரது பெற்றோர் கடந்த 2004 ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் வசித்து வருகிறார்கள். அவர்களை கடந்த 7 வருடமாக கனடாவுக்கு அழைத்துவர அஸ்மத்கான் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
கனடா அரசின் புதிய சட்டத்தால் தமது பெற்றோரை அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அழைத்து வர முடியாத நிலை உள்ளது என அஸ்மத்கான் வேதனையுடன் தெரிவித்தார். கனடாவில் வசிக்கும் தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ இதுவரையிலும் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெற்றோரை கனடாவுக்கு அழைத்தவர இன்று விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்கள் கனடாவுக்கு வர 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 

0 comments:

Post a Comment