பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட இத்தாலிப் பிரதமர்

Tuesday, 15 February 2011

விபசாரக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


டீன்ஏஜ் வயது யுவதியுடன் பணம் கொடுத்து விபசாரத்தில் ஈடுபட்டார் என்பது தான் இவர் மீதான குற்றச்சாட்டாகும்.

ஆரம்ப கட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இவர் மீது குற்றப்பத்திரத்தை இன்று தாக்கல் செய்தார்.

74 வயதான பெர்லுஸ்கோனி விபசாரம் புரிந்து விட்டு அதை மறைக்க முயற்சி செய்துள்ளார் என்று நீதிபதி தனது குற்றப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணைகள் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகும். பெர்லுஸ்கோனி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

பெர்லுஸ்கோனி ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று இத்தாலியில் பெண்கள் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டங்களையும். ஊர்வலங்களையும் நடத்தியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்ப்பும் வெளியாகியுள்ளது

0 comments:

Post a Comment