எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ-2

Thursday, 3 February 2011

ரஜினி, ஷங்கர் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்த எந்திரன்
படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ-2 எனும் பெயரில் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

எந்திரனை உருவாக்கிய அதே டீம் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வதாகவும், சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது இணையதளத்தில் ரசிகர் கேள்விக்கு பதிலளிக்கையில், “ரோபோவின் இரண்டாம் பாகம் குறித்து நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பார்க்கலாம்” என்று பதிலளித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, ரஜினி,ஷங்கர் எப்போது சொன்னாலும் நாங்கள் தயாரிக்க தயாராகவே உள்ளோம் என்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தான் தயாராக இருப்பதாக ரஜினி ஏற்கெனவே கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

இப்போது நண்பன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். வழக்கமாக அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தும் ஷங்கர், இந்தப் படத்தை குறுகிய காலத்தில் உருவாக்கித் தரவிருக்கிறார். நண்பன் முடிந்ததும் ‘ரோபோ- 2' வேலைகளைத் தொடங்குவார் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment