ஜெம்மா ஹாலில் முத்தத்தால் மூர்ச்சையாகி உயிரிழந்த காதலி

Friday, 11 February 2011

உயர்தரம் பயிலும் 18 வயதான அழகிய மாணவி ஜெம்மா பென்ஜமின் முதல் தடவையாக தனது காதலனை முத்தமிட்டதும் மூர்ச்சையாகி விழுந்து மரணத்தைத் தழுவினார்.
 சவுத்வேல்ஸில் உள்ள ட்ரீபொரஸ்ட் பகுதியில் உள்ள ஒரு
விட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று மாதங்களாக இவரைப் பின்தொடர்நது காதலித்து வந்துள்ளார் 21 வயதான டேனியல் ரொஸ்.


சம்பவ தினம் ஜெம்மாவின் வீட்டில் இருவரும் சந்தித்துள்ளனர். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த இருவரினதும் பேச்சு இறுதியில் முத்தத்தில் முடிந்துள்ளது.

வீட்டின் வாசல் பகுதியில் வைத்து முத்தமிட்டபின் உள்ளே சமயலறைக்குச் சென்றுள்ளார்கள் அங்கும் முத்தம் தொடர்நதுள்ளது. பிறகு ஜெம்மா ஹாலில் வந்து சோபாவில் அமர்ந்துள்ளார்.
அவ்வளவு தான் கண்கள் செருக ஆரம்பித்து, தலை சரிந்து தொங்கிவிட்டது. வாயிலிருந்து நுரையும் கக்க ஆரம்பித்துள்ளார். காதலர் பதறிப் போய்விட்டார். ஜெம்மாவை நிலைக்குக் கொண்டுவர தெரிந்த முயற்சிகள் எல்லாவற்றையும் செய்துள்ளார்.

அவசரப் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. இவர்கள் இருவருமே ஹொக்கி விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள். அதுதான் நட்புக்கும் காரணமாகியுள்ளது.

ஜெம்மா நல்ல ஆரோக்கியமானவர் என்றும் அவருக்கு சுகாதாரப் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என்றும் ஆனால் அவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பே மரணத்துக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

1 comments:

கொடுத்து வைத்த சாவு என்பது இது தானோ...
காதலுக்கு கண்ணில்லை என்பது அவர்களது புகைப்படத்தை பார்த்தே தெரிந்து கொண்டேன்...ஆனால் மூச்சு கூடவா இல்லை..

Post a Comment