கண்ணீர் உருக்கும் அன்னை மரியாள் !

Saturday, 5 February 2011

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் புனித அன்னை மரியாள் சிலை ஒன்றில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கண்ணீர்
வடிகின்றது.

ஏராளமானவர்கள் நேரில் வந்து இந்த அதிசயத்தை பார்த்துச் செல்கின்றனர்.

அதிசயத்தை காண வருபவர்களில் சிலர் மரியாள் மீது நம்பிக்கை உடையவர்கள். சிலர் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆயினும் மரியாள் சிலையில் இருந்து கண்ணீர் ஒழுகுகின்றமையைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.

ஒரு கண்ணீர்த் துளி அன்னையின் கன்னத்தில் துல்லியமாகத் தெரிகிறது. இன்னொரு கண்ணீர்த் துளி அன்னையின் தாடையில் துலங்குகிறது.

அற்புதம் என்று ஆராதிக்கின்றனர் பக்தர்கள்.

ஆனால் இது ஒரு எண்ணெய் கசிவு என்று சிலர் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment