பிச்சைக்காரர்கள் மாதத்துக்கு ரூ. ஒரு லட்சத்து 65 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்

Tuesday, 1 March 2011

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 
இஸ்ரேல் நாட்டில் பிச்சை எடுப்பது லாபகரமான தொழிலாக மாறிவருகிறது என்று அந்நாட்டு சமூகநல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் முன்பு எங்குமே
பிச்சைக்காரர்களைக் காணமுடியாது. தற்போது முக்கிய நகரான டெல் அவிவில் நிறைய பிச்சைக்காரர்கள் காணப்படுகின்றனர்.

வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் நாள்முழுவதும் நின்று பிச்சை எடுக்கும் ஒருவர் ஒருநாளைக்கு 5 ஆயிரத்து 625 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 650 ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறார். இந்தப் பிச்சைக்காரர்கள் மாதத்துக்கு ரூ. ஒரு லட்சத்து 65 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். இந்நாட்டுக் குடிமக்களின் சராசரி வருமானத்தை விட இது இருமடங்கு அதிகமாகும்.

பிச்சை எடுப்பவர்களில் பலர் குடிகாரர்களாகவோ, போதைக்கு அடிமையானவர்களாகவோ இருக்கிறார்கள். 1990-களில் ரஷியாவில் இருந்து குடிபெயர்ந்த தர்களால்தான் இஸ்ரேலில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக அந்தச் சமூகநல அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment