யாழ் தீ விபத்து

Tuesday, 29 March 2011

யாழ். நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 4 நடைபாதை கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலும் சில கடைகள்
பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழ். கோட்டை முனியர் வீதியிலுள்ள நடைபாதையிலுள்ள கடைகளே இவ்வனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது. இன்று இரவு 7.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்களும் படையினரும் இணைந்து தீயினைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர 45 நிமிட நேரமாகப் போராடினர். யாழ் தீ அணைப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்த பின்னரும் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னரே அவர்கள் வந்து சேர்ந்தனர்.

நடைபாதை கடைகளுக்கு அருகிலள்ள புல்லுக்குளத்திலேயே கழிவு நீர் அள்ளி எடுத்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

0 comments:

Post a Comment