திரு​மண வாழ்க்​கை​யின் மீதான கன​வு​கள் நிறைய இருக்​கி​றது. அதற்​கான ஒரு ஆண் மகனை தேடிக் கொண்​டி​ருக்​கி​றேன்

Sunday, 13 March 2011

அசின்,​ த்ரிஷா வரி​சை​யில் கோடம்​பாக்​கத்​தில் இருந்து பாலி​வுட்​டுக்கு செல்​கி​றார் நிலா. யு.டி.வி. தய​ரிக்​கும் இரண்​டுப் படங்​க​ளில் நடிக்​கி​றார். த​மி​ழில் வாய்ப்​பு​கள் இல்​லையா?
ஹிந்தி சினி​மாக்​க​ளில் நடிக்​கும் திட்​டத்தை வெகு நாள்​க​ளாக வைத்​தி​ருக்​கி​றேன். அது இப்​போ​து​தான் நிறை​வேறி இருக்​கி​றது. ஹிந்தி சினிமா என் அடுத்த கட்​டம் என எடுத்​துக் கொள்​ள​லாம். எல்லா நடி​கை​க​ளுக்​கும் இருப்​பது போலவே இது என் ஆசை என்​றும் எடுத்​துக் கொள்​ள​லாம். வாய்ப்​பு​கள் கிடைக்​கா​மல் வேறு ஒரு சினி​மா​வுக்கு போய் விட்​டேன் எனச் சொல்​லு​வது இதற்கு சரி​யா​ன​தாக இருக்​காது.
சினி​மா​வில் நினைத்த இடம் கிடைத்​ததா?
நம்​பர் ஒன் ஆக வேண்​டும். நினைத்த இடத்​தைப் பிடிக்க வேண்​டும் என்​று​தான் எல்​லோ​ரும் சினி​மா​வுக்கு வரு​கி​றார்​கள். அது கிடைக்​காத போது ஏமாற்​றம் அடை​வது இங்கு சரி​யா​யா​னது இல்லை. நான் முத​லி​டம் என்ற எண்​ணத்​து​டன் நடிக்க வர​வில்லை. சினி​மா​வுக்கு வரும் போது எனக்கு எந்த லட்​சி​ய​மும் கிடை​யாது. சினி​மாவை தாண்​டிய லட்​சி​யம் இருக்​கி​றது. அது சாத்​தி​ய​மா​கும் போது நீங்​களே நான் ஏன்?​ சினி​மா​வுக்கு வந்​தேன் என்​ப​தைப் புரிந்து கொள்​வீர்​கள்.
திரு​ம​ணம்…
எனக்​கும் திரு​மண வாழ்க்​கை​யின் மீதான கன​வு​கள் நிறைய இருக்​கி​றது. அதற்​கான ஒரு ஆண் மகனை தேடிக் கொண்​டி​ருக்​கி​றேன். இன்​னும் கிடைக்​க​வில்லை. கிடைத்​த​வு​டன் திரு​ம​ம​ணம் நடக்​கும். இது அடுத்த மாதமோ,​ நாளையோ நடக்​க​லாம்.
ஹிந்​தி​யில் யார் ஹீரோ?
யு.டி. தயா​ரிக்​கும் இரண்டு படங்​க​ளில் நடிக்க ஒப்​பந்​த​மாகி உள்​ளேன். இதில் யார் ஹீரோ என்​பதை இப்​போது சொல்ல முடி​யாது. ஜன​வ​ரி​யில் படப்​பி​டிப்பு தொடங்​கு​கி​றது.
ஒரு பாடல் வாய்ப்​புக்கு மறுத்​தீர்​க​ளாமே?
தமிழ் சினி​மா​வில் இது வரை ஒரு பாட​லுக்கு ஆட எனக்கு வந்த வாய்ப்​பு​க​ளின் எண்​ணிக்கை நிறைய. பெரிய படங்​கள் என்​றால் ஆட​லாம். பிர​ப​ல​மும் கிடைக்​கும். ரசி​கர்​க​ளும் ஏற்​பார்​கள். சின்ன சின்ன படங்​க​ளில் வாய்ப்பு கிடைத்த போது மறுத்​தேன். அது​வும் அதிக க்ளா​ம​ராக இருந்​தது. அத​னால்​தான் அந்த மறுப்பு.
கற்​றது…
சினி​மா​வில் கற்​றது நிறைய. சினி​மா​வில் சாதிக்க நிறைய பேர் வந்​துக் கொண்​டு​தான் இருக்​கி​றார்​கள். சிலர் புக​ழின் உச்​சிக்​கும்,​ சிலர் சறுக்​கி​யும் விழு​கி​றார்​கள். சினி​மா​வில் இது சக​ஜம் என எனக்​கும் தெரி​யும். தெரிந்​து​தான் நான் வந்​தேன். பல்​வேறு நபர்​களை இத்​து​றை​யில் சந்​தித்து விட்​டேன். அவர்​கள் ஒவ்​வொ​ரு​வ​ரி​டம் இருந்​தும் ஒரு விஷ​யம் கற்​றுக் கொண்​டி​ருக்​கி​றேன். நாளும் ஒரு விஷ​யத்​தைக் கற்​றுத் தரும் சினிமா ஒரு பள்ளி.

0 comments:

Post a Comment