நெருப்பு வீழ்ச்சி் அரிய காட்சி! (வீடியோ இணைப்பு)

Thursday, 3 March 2011

படத்தை பார்த்ததும் எரிமழலக்குளம்பு வழிகிறது என நினைத்திருப்பீர்கள். ஆனால் இது ஒரு நீர் வீழ்ச்சி. நீர் வீழ்ச்சி எப்படி நெருப்பாக விழும் என நினைக்கிறீர்களா? ஆம் அது சூரிய ஒளியின் மாய வித்தைதான் அது. காணக்கிடைக்காத காணுவதற்கு மிக மிக அரிதான கண்கொள்ளாக் காட்சியே இது. அமெரிக்காவின் கலிகோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் இது காணப்படுகிறது. சுமார் 2000 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகின்றது.

வருடாந்தம் ஒரு சில நாட்களே இந்த அரிய காட்சி தென்படுகிறது. குறிப்பாக பெப்ரவரி மாதங்களில் இது தென்படும். பொழுது சாயும் நேரம் சூரிய ஒளி குறித்த ஒரு கோணத்தில் பட்டு ஒளி தெறிப்படைந்து நீர் வீழ்சியில் இருந்து பாயும் நீரின் மீது படுகிறத. அப்போது நீர் செம்மஞ்சள் நிறமாகி தீக்குழம்பு போல் காட்சியளிக்கிறது. இந்தக்கண்கொள்ளாக் காட்சியை காண 3.5 மில்லியன் மக்கள் படையெடுக்கின்றனர். மாலை 5.30 மணியளவில் இந்த காட்சியை அழகாக காணமுடியும் என்கிறார்கள் சுற்றுலா பயணிகள்.

0 comments:

Post a Comment