உண்மைக் குற்றவாளிகள் யார்? மஹிந்த அரசை கூண்டோடு சதாம் ஹீசைனைப் போல கயிற்றில் தொங்கவிடும் என கடைசி நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

Wednesday, 28 September 2011

இலங்கையில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் அப்பாவி பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டமையானது ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை தமிழர்களிற்கு எதிராக நடந்த இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணை எனும் கோணத்தில் அழுத்தமாக ஆராயப்பட்டு அதை விசாரிக்கும் பொறுப்பை ஸ்ரீலங்கா அரசே நடாத்த வேண்டும் என்றும் அதை கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டு நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றும் பான் கீ மூனால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இலங்கை அரசிற்கு எதிராக இரண்டு வகையான குற்றங்கள் முன் வைக்கப்படுகின்றன.1)  போரின் போது நிகழ்த்திய படுகொலை (முள்ளிவாய்க்கால் புதுமாத்தளன் புதுகுடியிருப்பு) 
2)  வன்னிப் புணர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்கள் மீதான பின்னைய சுத்திகரிப்பு நடவடிக்கை


முன்னையதை கொசோவோ பாணியிலும் பின்னயதை நாஸி தடுப்பு முகாம்கள் பாணியிலும் நிகழ்த்தப்பட்டதிற்கு ஒப்பானதாக நிறுவப் பார்க்கிறது ஐக்கிய நாடுகள் சபை.


இனப்படுகொலை என்று வந்தால் ஐ.நா. தலையீடும் சர்வதேச விசாரணையும் சகஜமானதே. குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை. மன்னார் மேற்றுராணியார் இராயப்பு ஜேக்கப் ஆண்டகையால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் எனும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அழித்த வாக்கு மூலம் இதற்கு நல்ல ஆதாரம். (பாதிரிகள் பொய் பேசுவதில்லை!!). 


ஆனால் இங்கு பிரச்சனையே வேறு. போர்க் குற்றம் சுமத்தப்பட்ட நாட்டின் அதிபரிடமே இதை விசாரணை செய்யுமாறு வலியுறுத்துவது நகைப்புக்கிடமானது. இதற்கு பின் புலத்தில் அமெரிக்க மெக்கானிஸம் காணப்படுகிறது.


பிரபாகரனையும் புலிகளின் தலைமைப் பீடத்தையும் அழிப்பதற்கு என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என தமிழ் மக்கள் அழிக்கப்படும் வரை பாராமுகமாக இருந்து விட்டு இப்போது மட்டும் இந்த நாடுகள் மனித உரிமை பற்றிப் பேசுவதன் மர்மம் என்ன?


இலங்கை அரசிற்கு ஆர்வமூட்டி அறிவூட்டி ஆயுதமளித்து ஏனைய வசதிகளனைத்தையும் அளித்து ஆசீர்வதித்து களமிறக்கியது யார்?   அமெரிக்கா இந்தியா சீனா பாகிஸ்தான் ஈரான். ஆனால் குற்றவாளி மட்டும் இலங்கை. அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையை நட்டாற்றில் கைவிட்டு மனித உரிமை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதிற்கு சமம்.


போர்க்குற்ற விசாரணை என்று வந்தால் முதலில் இந்தியா அமெரிக்கா சீனா பாகிஸ்தான் ஈரான் போன்ற நாடுகளே விசாரணக்குட் படுத்தப் படல் வேண்டும். விசேடமாக இந்தியாவும் அமெரி்க்காவுமே உண்மைக் குற்றவாளிகள்.


அவர்கள் வசம் உள்ள அதி சக்தி வாய்ந்த செய்மதிகளின் திறனால் முன் கூட்டியே தெரியும் நடக்கப் போவது என்ன என்று. நடக்க முன்பும் தடுக்கவில்லை. நடக்கும் போதும் தடுக்கவில்லை.

அடைக்கலம் நாடி வந்த பெண்ணை அபயமளித்து தேவையேற்படும் போதெல்லாம் பலாத்காரமாக கற்பளிப்பது போல் தான் அமெரிக்கா ஐ.நா. சபையை தனக்கு வேண்டிய வேளைகளின் போதெல்லாம் நினைத்தாவாறு ஆட்டுவிக்கிறது. பான் கீ முன்னை ஆடச்சொன்னால் ஆட வேண்டும். அவிழ்க்கச் சொன்னால் அவிழ்க்க வேண்டும். அவர் இதுவும் செய்வார் இதற்கு மேலும் செய்வார்.


சீனா. இலங்கையை சுற்றி நிற்கும் மலைப் பாம்பு.  இது இந்தியாவிற்கும் ஆகாது . அமெரிக்காவிற்கும் ஆகாது. ஆக ஐ.நா. சபையை வைத்து பூச்சாண்டி காட்டுவதன் மூலம் இலங்கையை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பார்கிறார்கள் இவர்கள். இதுதான் கள நிலைமை.


இலங்கை தந்திரக்கார நரிகள் நிறைந்த நாடு. இந்த மாய வலையில் இருந்து தப்ப ரஸ்யாவிடமோ அல்லது சீனாவிடமோ முற்று முழுதாக தங்களை அர்ப்பணிக்கத் தயங்காது. 


இதில் பாவம் தமிழர்களே. ஐ.நா. தமிழர்களிற்கு நீதி வழங்கும் நியாயம் வழங்கும். மஹிந்த அரசை கூண்டோடு சதாம் ஹீசைனைப் போல கயிற்றில் தொங்கவிடும் என கடைசி நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.


ஐ.நா. உலக வரலாற்றில் எங்குமே நீதியா செயற்பட்டதில்லை என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிக்கு புரியாமல் போவது வியப்பானதே.
நன்றி;கைபர் - அபூ மஸ்லமா

1 comments:

Simon Kawin said...

அருமையான எதார்த்தமான கட்டுரை உங்கள் கட்டுரையை நான் நகல் எடுத்துள்ளேன் - நன்றி.

Post a Comment