கள்ளக் காதலிக்குக் கொடுத்த சொத்து 543 மில்லியன்

Wednesday, 28 September 2011

தனது முன்னாள் கள்ளக்காதலி தன்னை மிரட்டியதாக் கூறி அவருக்குச் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சித்த உலகின் பணக்காரர்களில் ஒருவரான சாமுவேல் ரக் லீயின் (71) பொய்ப்பித்தலாட்டம் நேற்று பிரித்தானியாவின் நீதிமன்றத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டது.

இவருக்கு உலகெங்கிலும் பரந்த சொத்துக்கள் உள்ளதாகவும் 16 ஏக்கர் பண்ணை வீடொன்று சோஹோ மற்றும் மேபெயார் பகுதிகளுக்கிடையில் சொந்தமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவரது முன்னாள் காதலி தன்னைக் கர்ப்பவதியென்றும் தனது மனைவிக்கு அதைச் சொல்லப்போவதாக மிரட்டித் தன்னிடம் 543 மில்லியன் பணத்தினைக் கேட்டதாகவும் கூறி இவர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஆனால் தனியார் விசாரணையாளர்களை அமர்த்திச் சாட்சிகளை ஏற்படுத்தித் தனது காதலிக்கெதிராக இவர் குற்றச்சாட்டுக்களை உருவாக்கியிருந்தார்.

இவர் உண்மையிலேயே தானாகவே சட்டபூர்வமாக இப்பெண்ணிற்கு 543 மில்லியன் பெறுமதியான ஒரு விடுதியையும் பல சொத்துக்களையும் பணத்தினையும் வழங்கியிருந்தார். இதனைப் பின்னர் அவள் மிரட்டி எடுத்ததாக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

543 மில்லியன் சொத்திற்காக இரண்டு வருடமாக நடந்து வந்த இந்த சொத்து வழக்கில் இவர் இதுவரையில் 272 மில்லியன் ரூபா இழந்திருந்தார்.

0 comments:

Post a Comment