லிபிய மக்கள் அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்குவதற்காக போராடவில்லை

Wednesday 28 September 2011



லிபியாவில் மக்கள் புரட்சி என்பது நாம் பொதுப்படையாக அறிந்த விடயம். சர்வாதிகாரியும் மனித குல விரோதியுமான கேர்ணல் கடாபிக்கு எதிராக மக்கள் புயலாகக் கிளர்ந்தது ஒன்றும் புதுமையல்ல. போராட்ட நெருப்பு கடந்த 30 வருடங்களாக நாட்டினுள்ளே புகைந்து கொண்டே இருந்தது. எகிப்தின் வீழ்ச்சியுடன் லிபிய புரட்சி எழுச்சி கண்டது. இந்த இடத்தில் நாம் உன்னிப்பாக முக்கிய சில விடயங்களை கவனிக்க வேண்டும்.
1) மற்ற அரபு நாடுகள் போல மக்கள் சதுக்கங்களில் கூடி நிற்காது நேரடியாக களமிறங்கி நகரங்களை கைபற்ற முற்பட்டமை.

2) மற்ற அரபு நாட்டு தலைவர்கள் போலல்லாது புரட்சிக்கு எதிரான நேரடி                
     இராணுவ நடவடிக்கையை கடாபி முன்னெடுத்தமை

3) சோஷலிச ரஷ்யா தொடர்ந்தும் இவ்விவகாரங்களில் மெத்தனப்                         போக்கை கடைப்பிடிக்கின்றமை

4) தோழமை நாடான சீனாவின் மௌனம்

5) முன்னைய லிபியாவின் ஏகாதிபத்திய வல்லரசு இத்தாலி பார்வையாளராக மட்டும் இருக்கின்றமை

6) பிரான்ஸின் அவசர அவசரமான லிபியாமீதான அக்கறையும் மக்களை
     காப்பாற்ற இராணுவத்தை அனுப்ப தயாராவதும்

7) அணிசேரா நாடுகளின் கணவன் லிபியா என்றால் மனைவி இந்தியா.
     ஆனால் இந்தியா அப்பட்டமாக மௌனிப்பது

8) இஸ்ரேலிய நேரடி வழி காட்டலின் அடிப்படையில் ஆபிரிக்க கூலிப்படைலிபிய மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை


இப்போது ஒரு நூல் இணைப்பு தென்படுகிறதா. ஆம். எல்லாமே ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டவை. நாடகம் மட்டும் அழகாக அரங்கேற்றப்படுகிறது.
அனைத்தையும் செய்வது அமெரிக்கா. திட்டமிடுவது பென்டகன். நிறைவேற்றுவது C.I.A. புரியவில்லையா? புரியும்படி சொல்வோம்.

லிபிய மக்களிற்கு உணவு பஞ்சம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
லிபிய மக்கள் வளமான வாழ்க்கையே வாழ்கின்றனர்.
லிபிய மக்கள் வர்க்க புரட்சியில் ஈடுபடவில்லை.
லிபிய மக்கள் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க போராடவில்லை

லிபிய மக்களது போராட்டம் அடக்குமுறைக்கு எதிரானது.
லிபிய மக்களது போராட்டம் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிரானது.
லிபிய மக்களது போராட்டம் தனி மனித சர்வாதிகாரத்திற்கு எதிரானது.
லிபிய மக்களது போராட்டம் பாசிஸ அரசிற்கு எதிரானது.
லிபிய மக்களது போராட்டம் அவர்களது வாழ்வியல் உரிமைக்கானது.
லிபிய மக்களது போராட்டம் அவர்களது அரசியல் உரிமைக்கானது.
லிபிய மக்களது போராட்டம் அவர்களது தனி மனித சுதந்திரத்திற்கானது.

அவ்வாறானால் எதற்காக பல முரண்பட்ட செயற்பாடுகள் லிபியாவில் அரங்கேறுகின்றன. எதிர்பார்க்கப்பட்ட வெற்றிகள் தோல்வியில் முடிகின்றன. நிச்சயமான தோல்விகள் திடீரென வெற்றியாக பரிணமிக்கின்றன. எப்படி முடியும் இது. இதை யார்தான் பின்புலத்தில் நின்று செய்வது. சற்று கவனித்தால் புரியும். 

  • போராட்டக் குழுக்கள் மூன்றுவகையானவை. 1. அரசியல் செயற்பாட்டாளர்கள்.  2. அல் கயிதா மற்றும் ஸலபி மத அடிப்படைவாத சிந்தனையாளர்கள் 3. இஹ்வான் மற்றும் ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற தீவிர கிலாபாவாத செயற்பாட்டாளர்கள். இந்த குழுக்களினிடையே அமெரிக்க ஊடுருவல் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்துகின்றது.
  • இந்தியா ரஷ்யா சீனா போன்ற நாடுகளுடன் மேற்படி பிரச்சனையில் இடையீடு செய்ய வேண்டாம் அதற்கு பகரமாக அமெரிக்காவும் மேற்குலகும் அவர்களது வர்த்தக சந்தையில் குறுக்கீடு செய்யாது.
  • அமெரிக்காவே கடாபிக்கு கொலை செய்ய மறைமுகமாக அநுசரனை வழங்குகிறது.
  • அமெரிக்காவே போராட்டக் குழுக்களை துாண்டி விடுகிறது. உதவியுமளிக்கிறது.
  • அமெரிக்காவே மனித உரிமை பற்றி பேசுகிறது. நேச நாட்டு படைகளின் தரையிறக்கம் பற்றி விவாதிக்கிறது.
  • அமெரிக்கா லிபியாவை துண்டாடப் பார்க்கிறது. பிரான்ஸ் இதன் பங்காளியாக உள்ளது. 
  • பிரச்சனையை பல முனைகளிலும் பெரிதாக்கி மனித உரிமை மீறல் அல்லது யுத்த குற்றம் என்ற போர்வையில் கால் பதிக்கப் பார்க்கிறது.
  • வெகுஜன ஊடகங்கள் இதற்கு இசைவான பாதையை உலகலாவிய ரீதியில் அமெரிக்க சார்பாக செப்பனிட்டுக் கொடுக்கின்றன. 

லிபிய மக்கள் அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்குவதற்காக போராடவில்லை. அதன் நிழலில் வாழ்வதற்காக போராடவில்லை. அவர்களது போராட்டமெல்லாம் சுதந்திரமான நாகரீக வாழ்விற்கானது. மேற்கத்தைய பாணியிலான அரசியல் சமூக பொருளாதார நிலையை லிபியாவில் உருவாக்க வேண்டும் என்பதே. இன்றைய அவர்களது நிலை. அமெரிக்கா ஆண்டாலும் பரவாயில்லை கடாபி அழிய வேண்டும் இதுவே அவர்கள் நிலை. 

ஆக மொத்தத்தில் பிசாசை பிடிக்காமல் பேயை வீட்டிற்கு அழைத்துள்ளனர். தாஹீதை விரட்டி தஜ்ஜாலை வரவேற்கும் போராட்டமிது. முடிவாக ஒன்று சொல்லலாம்.  இறைவனின் உதவியற்ற சடவாத போராட்டம் என்றுமே தோற்றுப் போகும் என்தே அது.


நன்றி;கைபர்

0 comments:

Post a Comment