வேண்டாம் இனவாதம்!

Sunday, 18 September 2011

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டு வருகின்றது பல இணைதளங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இது தொடர்பான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது  இது தொடர்பாக   தகவல்களையும் லங்காமுஸ்லிம்  பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ள புனர் வாழ்வு , சிறைச்சாலைகள மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான சிங்களத்தில் 8 இணையதளங்களும் ஆங்கிலத்தில் 10 இணையதளங்களும் இயங்குவதாகவும் (அல்) குர்ஆனுக்கு எதிராகவும் முஹம்மது நபிக்கு (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் உரையாற்றியுள்ள அவர் புதியதொரு பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் இதன் பின்னணியில் ஆயுத வியாபாரிகள் இருகின்றார்கள் அவர்களுக்கு பயங்கரவாதம் வேண்டும் என்றும்.  அரசாங்கள் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி காணும்போது இவற்றில் தலையிடுவவதற்காக மேற்குலகச் சக்திகள் இன்று பல வழிகளில் பயங்கரவாதத்தை வளர்க முயற்சிகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல இணையதளங்கள் இயங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகா சுட்டிகபட்டபட்டுள்ளது. இது தொடர்பாக லதீப் பாரூக் எழுதிய கட்டுரையும் ஆங்கிலத்தில் வெளியாகியது. அதில் 18 இணையதளங்கள் இயங்குவதாக தெரிவிக்கபட்டுள்ளது . கடந்த ஜூன் மாதம் ஏ. ஜி.ஏ பாரி என்பவரும் சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு முஸ்லிம்களுக்கும் எதிரான இணையத்தளம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை வழகியதாக எமக்கு ஈமெயில் மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது .
அதேவேளை அனுராதபுரத்தில் இருந்து எமது தேசிய செய்தியாளர் ஒருவரை தொடர்புகொண்ட ஆசிரியர் ஒருவர் அங்கு சிங்களத்தில் துண்டு பிரசுரங்கள் வெளியாகியுள்ளதகவும் அதில் முஸ்லிம்களை மோசமா வர்ணித்து இனப் பெருக்கத்தின் மூலம் பௌத்தர்களின் நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும் மேலும் அது முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களை தூண்டிவிடும் வசங்களை கொண்டுள்ளதாகவும் ஆனால் அந்த துண்டு பிரசுரம் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற விபரம் அதில் குறிப்பிடப்படவிலை என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெளத்த பிக்குகள் சகிதம் போலீசார் பார்த்துகொண்டிருக்க  சியாரம் உடைக்கப்பட்ட சம்பவதைக் கூட  இலங்கையின் பிரதான சில பத்திரிகைகள் அதன் தொன்மையை அதன் 400 ஆண்டுகால வரலாற்றை  மறைத்து  பல முஸ்லிம் தலைவர்களின் விருப்பத்துக்கு மாறாக பௌத்தர்களின் இடத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தைத்தான்  அந்த குழுவினர்  உடைத்துள்ளார்கள்  என்ற தகவலை வெளிபடுத்தும் விதமாக எழுதும் செய்திகளைத்தான் பார்க்க முடிகின்றது  என்பது அதிர்ச்சியானது .
அதேவேளை அரசாங்கத்தின் அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயல்பாடுகளும் கருத்துகளும் எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாள் உழ்கியா விடயத்தை பாதிக்கும் என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படுகின்றது.

0 comments:

Post a Comment