கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கள்ள உறவில் ஈடுபட்ட பெண்!

Tuesday, 30 August 2011

தனது கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் பாலியலுறவில் ஈடுபட்ட பெண்ணையும் கள்ளக்காதலனையும் இளைஞர்கள் விரட்டியடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை ஹொரவப்பொத்தானை பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது.. நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக குறித்த பெண் அவரின் கணவருடன் குடும்ப சகிதம் நகருக்குச் சென்றுள்ளார்கள்.

மனைவியை வீதியில் நின்குமாறு கூறிவிட்டு வங்கி ஒன்றுக்கு சென்றசமயம் அந்தயுவதியின் கள்ளக்காதலன் அவ்விடத்துக்கு வந்துள்ளான். இரவுவேளை தான் வீட்டுக்கு வந்து தூங்குவதாக கூறியுள்ளான்.

அதை அப்பெண் ஏற்கமறுக்க தான் தரும் தூக்க மாத்திரையை கணவருக்கு கொடுக்கும்படி கள்ளக்காதலன் கூறியுள்ளார். இத்தனை சம்பவங்களையும் அருகில் நின்று உற்றுநோக்கிய அப்பகுதி இளைஞர்கள் சிலர் அன்றிரவே அவர்களது வீட்டின் அருகே பதுங்கியிருந்துள்ளனர்.

அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கு வந்த கள்ளக்காதலன் வீட்டினுள் உள்புகுந்துள்ளான். உடனே பதுங்கியிருந்த இளைஞர்கள் சம்பவத்தை கணவனுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் மர்மமனிதர் என சத்தமிட்டுள்ளனர்.

ஆனால் கணவர் வெளியில் வரவேயில்லையாம் வீட்டுக்குள் வந்த கள்ளக்காதலனே வீட்டுக்குள் இருந்து ஓட்டமெடுத்துள்ளார்.

மறுநாள் இரவுச்சம்பவம் பற்றி கணவரிடம் இளைஞர்கள் கேட்டபோது தன்னால் கண்விழிக்கமுடியாத நிலையில் தான் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததாக அந்த அப்பாவிக்கணவர் கூறியுள்ளார். பார்த்தீர்களா நாட்டில் என்னவெல்லாம் நடக்கின்றது என்று?

0 comments:

Post a Comment