மக்களை வியப்பில் ஆழ்த்திய ஒளி(வீடியோ இணைப்பு)

Sunday, 8 May 2011

ரஷ்யாவில் இரவு நேரத்தில் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது. அதைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.


ரஷ்ய ராணுவ தகவல் தொடர்புக்காக ஒரு செயற்கைகோள் சோயுஸ் ராக்கெட் மூலம் விண்வெளி பாதைக்கு அனுப்பப்பட்டது. இந்த செயற்கைகோள் இரவு நேரத்தில் ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் உள்ள எக்டேரின் நகரை கடந்த போது வானில் பிரகாசமான நீலநிறக்கோடு பளிச்சிட்டது.

ராக்கெட் மூலம் சீறிச்செல்லும் போது வெளிப்பட்ட சிறிய துகள்களின் மீது நிலா வெளிச்சம் விழுந்ததால் இந்த பிரகாசமான நீலநிறக்கோடு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

துருவப்பகுதிகளில் பூமி காந்தப்புலப் பகுதி காரணமாக பெரும் துகள்கள் திடீரென மோதிக் கொள்ளும் போது வானில் பிரகாசமான ஒளி ஏற்படுவது உண்டு. இந்த இயற்கை ஒளியைப் போன்று ரஷ்ய செயற்கை கோளின் வான்வெளி பயணத்தின் போது நீல நிற பிரகாச ஒளி ஏற்பட்டு பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

0 comments:

Post a Comment