கப்பம் கொடுக்காதீர்!

Sunday, 8 May 2011

"கப்பம் கொடுக்காதீர்கள், நாங்கள் உங்களை பாதுகாக்கின்றமைக்கு இருக்கின்றோம்."


இலங்கையின் யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரை இன்று சந்தித்து உரையாடியபோது இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

சிவில் அலுவல்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்புகளுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு கத்தோலிக்க அச்சக மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். வர்த்தகர்கள் 250 பேர் வரை கலந்து கொண்டனர்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
" துப்பாக்கிகளுக்கு அஞ்சி வேலை பார்த்த காலம் மலையேறிப் போய் விட்டது. நீங்கள் சட்டரீதியான தொழில் முயற்சிகளில் சுதந்திரமாக ஈடுபடுகின்றமைக்கு உரித்துடையவர்கள் ஆவீர்கள்.ஆராவது கப்பம் கேட்பார்களானால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கப்பம் கோருகின்றமையை இந்நாட்டில் இருந்து முற்றாக இல்லாது ஒழிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் திடசங்கற்பம் பூண்டு உள்ளார்கள்.
யாழ். மாவட்டத்தில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகள், உட்கட்டுமாணப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பல மில்லியன் ரூபாயை அரசு செலவு செய்கின்றது.
உள்நாட்டின் முன்னணி வங்களில் அநேகமானவையும், வெளிநாட்டு வங்கிகள் பலவும் யாழ். மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

வீதிகள் விஸ்தரிக்கப்படுகின்றன. உட்கட்டுமாணப் பணிகள் இடம்பெறுகின்றன. விவசாய நிலங்களில் பயிர்ச் செய்கைகள் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாண மாவட்டம் செழிப்படைந்து வருவதைக் காட்டும் அடையாளங்களே இவை
யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் பாதுகாப்ப வழங்க வேண்டியது இராணுவத்தின் கடமை ஆகும்.

பலாலி விமான நிலையம் இந்திய அரசின் உதவியுடன் விஸ்தரிக்கப்பட உள்ளது. காங்கேசன் துறை துறைமுகம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக விரைவில் திறக்கப்பட உள்ளது. இவை இரண்டும் யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வரப்பிரசாதங்களாக அமையும்.

பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் இராணுவத்தின் செயல்பாடு மாறி விட்டது. புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வது இராணுவத்தின் தற்போதைய செயல்பாடாக உள்ளது."

0 comments:

Post a Comment