சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடன் உடலின் புகைப்படத்தைப் பார்த்த அமெரிக்க எம்.பிக்கள்!

Wednesday, 11 May 2011

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் போட்டோவை அமெரிக்கா வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் அல்ல.

இப்படம் கிராபிக்ஸ் மூலம் செய்யப் பட்டது என அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பேச்சு கிளம்பியது. ஆனால் இதை அதிபர் ஒபாமா மறுத்தார். கொல்லப்பட்டது பின்லேடன்தான்.

டி.என். ஏ. சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் பின்லேடனின் உடல் போட்டோவை அமெரிக்க எம்.பி.க்களை பார்க்க ஏற்பாடு செய்தார்.

உளவு பிரிவு மற்றும் ஆயுதப்படை சேவை கமிட்டிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உளவுத்துறை அலுவலகத்துக்கு சென்று அந்த போட்டோக்களை பார்த்தனர்.

0 comments:

Post a Comment