ஒசாமா கொலை! தொடர்ந்து வெளியாகும் புதிய தகவல்கள்

Wednesday, 4 May 2011

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது அவர் நிராயுதபாணியாகவே இருந்தார்.

9/11 தாக்குதல் மற்றும் 7/7 தாக்குதல் என்பனவற்றில் அவரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொது மக்களைப் போலவே இவரும் கடைசியில் நிராயுதபாணியாகவே மரணித்தார்.

கொல்லப்படும் போது அவரை இலக்கு வைத்த அமெரிக்கப் படை வீரரை ஒசாமாவின் மனைவி தடுக்க முயன்றார். ஆனால் அது பலிக்கவில்லை.

ஒசாமா தலையில் சுடப்பட்டார். ஒசாமா கொல்லப்பட்டமை தொடர்பாக சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் ஒபாமாவின் பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகர் ஜோன் பிரனன் முன்னர் தெரிவித்தத் தகவல்களிலும் பார்க்க முரண்பட்டதாகக் காணப்படுகின்றன.

அமெரிக்க கடற்படை வீரர்கள் லாடனை சுற்றி வளைத்தபோது லாடன் தப்புவதற்காக தனது மனைவியை மனிதக் கேடயமாகப் பாவித்தார் என்று முன்னர் பிரனன் தெரிவித்திருந்தார்.

யெமன் நாட்டைச் சேர்ந்த அமல் அஹமட் அல் சதா என்ற 27 வயது மனைவியே ஒசாமாவுடன் கடைசி நேரத்தில் அருகில் இருந்தவராவார்.

54 வயது லாடனைக் காப்பாற்றும் முயற்சியில் இவரின் காலில் சூடு பட்டது. ஒரு குறிபார்த்து சுடும் வீரரே லாடனைக் குறிவைத்ததாகவும் பிரனன் முன்னர் தெரிவி்த்திருந்தார்.

ஆனால் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் நேகார்னே இப்போது வெளியிட்டுள்ள தகவலில் லாடன் சுற்றிளைத்து நேருக்குநேர் சுடப்பட்டதாகவும், அவர் அமெரிக்கப் படைகளுக்கு எதிர்ப்புக் காட்டியதாலேயே சுடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

லாடன் சுற்றி வளைக்கப்பட்டதும் ஆயுதம் ஒன்றை எடுக்க முயன்ற வேளையிலேயே சுடப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.

0 comments:

Post a Comment