இந்த "வாங்கும் முன் கவனிக்க-5" சீரீஸ் பதிவுகள் முழுக்க முழுக்க சாதாரண ந(ண்)பர்களை கருத்தில் கொண்டு எழுதப்படுவன. கோபால்
போன்ற மேலதிக ஞானமும் ஆர்வமும் கொண்டவர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்படுவன அல்ல. ஆனால் அத்தகையோர் இங்கு பின்னூட்டப் பகுதியில் மேலும் பல தகவல்களை நம் நண்பர்களின் நலம் கருதி நம்மிடையே பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த "வாமுக-5" குறும்பதிவுகள் தொடரில் முதலாவதாக நாம் பார்ப்பது டிஜிட்டல் கேமரா. உங்களுக்கெனவோ அல்லது நண்பர்களுக்கு பரிசளிக்கவெனவோ டிஜிட்டல் கேமரா வாங்க நீங்கள் உத்தேசித்துக் கொண்டிருந்தால் கீழ்கண்ட ஐந்து விடயங்களை கருத்தில் கொள்ளவும்.
1. எந்த கேமரா வாங்க வேண்டும்?..SLR or Compact Point and Shoot?
லென்சுகளை தேவைக்கேற்ப்ப கழற்றி மாட்டி, அவற்றை சுழற்றி சுழற்றி சூம் செய்து மிகக்கறாறாக போட்டோ எடுக்கும் பரம்பரை நீங்கள் என்றால் SLR (Single-Lens Reflex) எனப்படும் கேமரா உங்களுக்குத் தகும். கலியாண வீடுகளில் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகியிருக்கும் எட்டிப்பார்க்கும் பிளாஷ் லைட்டுகளோடு கூட வரும் மிகப்பெரிய சைசு கேமராக்கள் தான் இந்த SLR கேமராக்கள். கோபால் போல ஐநூறு, ஆயிரம் டாலர்களென போட்டோ எடுக்கும் ஒரு கேமராவுக்கு நீங்கள் செலவிடத் தயாரெனில் SLR-கள் ஓகே. என் போன்ற எடுத்தான் கவுத்தான்களுக்கு நூறுடாலர் அளவில் கிடைக்கும் பாயிண்ட் அன்ட் சூட்டுகள் எவ்வளவோ மேல்.
2.பேட்டரி வகை..
டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் AA போன்ற அல்கலைன் பேட்டரிகள் பயன்படுத்தும் கேமாராக்கள் எப்போதுமே எனக்கு பிடித்ததில்லை. லித்தியம் அயான் எனப்படும் ரீசார்ஞ் செய்யக்கூடிய பேட்டரிகள் கொண்டவை எனது பிடித்தம். இஷ்டத்துக்கும் பேட்டரிகள் பற்றிய பட்ஜெட் பயமின்றி படம் சுட்டுத்தள்ளலாம். மின் இணைப்பே இல்லாத இடங்களுக்கு சாகசப் பயணம் சென்று "நிஜம்" பிடிப்போருக்கு அல்கலைன்கள் உதவலாம்.
3. அந்த MP கணக்கு..
5 MPயே டூமச்சாம். அதனால் 12.1 megapixel, 14 megapixelபற்றி யெல்லாம் நீங்கள் ரொம்ப கவலைப்படத் தேவையில்லை.உங்கள் பட்ஜெட்டுக்கு எது செட்டாகுதோ அது நல்லது.ஆனால் வாழ்வின் அற்புதமான தருணங்களை resolution மிகக் குறைந்த செல்போன் கேமராக்களில் எடுத்து வீணாக்கி விடாதீர்கள். 4x6 பிரிண்ட் போட குறைந்தது 540x360 pixels வேண்டும். 8 x 10 பிரிண்ட் போட குறைந்தது 900x720 pixels வேண்டும். அதுபோல உண்மையிலேயே டெலஸ்கோப்பு போல நீண்டு நீண்டு சூம் செய்யும் ஆப்டிக்கல் சூம் அதிகம் இருப்பது நமக்கு கேமராவில் தேவையான விசயம் தான். ஆனால் வெறும் படத்தை மட்டும் சூம் செய்து போகப்போக மோசமான தரம் தரும் டிஜிட்டல் சூம் பற்றி ரொம்ப கவனிக்க தேவையில்லை.
4. கூடவே ஒட்டி வருவன..
எடுக்கும் போட்டோக்களை சேமித்து வைக்க குறைந்தது 2GB அல்லது 4GB மெமரி கார்டாவது இருப்பது அவசியம். கேமராவோடு எவ்வளவு மெமெரி வருகிறதுவென விசாரியுங்கள். அப்படியே உங்கள் கேமராவை பாதுகாக்க ஒரு கேசும் இலவசமாக வந்தால் இன்னும் அருமை. HD video ரெக்கார்டிங், HDMI output இதெல்லாம் கேமராவின் விலையை கூட்டும் சமாசாரங்கள்.
5. எடுத்த படங்களை கண்டு ரசிக்க..
எடுக்கப்பட்ட படங்களை பெரிய திரையில் பார்வையிட உங்களிடமோ அல்லது நீங்கள் பரிசளிக்கவிருக்கும் நண்பரிடமோ ஒரு மேஜைக்கணிணியோ அல்லது மடிக்கணிணியோ இருப்பது அவசியம். அல்லது ஒரு டிஜிட்டல் போட்டோ பிரேமாவது இருப்பது அவசியம். வீடுகளில் கணிணி/போட்டோ பிரேம் இல்லாதோர் கூட தாங்கள் எடுத்த டிஜிட்டல் போட்டோக்களை அச்சிட்டு வழங்க சென்னையில் http://www.konicacolorlab.com போன்ற தளங்கள் உள்ள்ன . பெங்களூர்காரர்கள் http://www.picsquare.com முயன்று பார்க்கலாம்.

0 comments:
Post a Comment