வௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னாரிலிருந்து நேரடித்தகவல்

Tuesday, 18 January 2011

மூன்று தசாப்பத காலமாக நாட்டில் நீடித்திருந்த பயங்கரவாதச் செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டு, மக்கள் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டுடிருக்கும் இக் காலகட்டத்தில் இதை சகிக்க முடியாது தவிக்
கும் சில கும்பல்கள் மக்களிடத்தில் பொய்யான பிரச்சாரங்களைச் செய்து மக்களின் இயல்பு வாழ்க்ககையை குழப்பி அதில் குளிர்காய முயற்சிப்பது கடந்தகால நிகழ்வுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.

எல்ரிரிஈனரதும் எல்ரிரிஈ சார்பு ஊடகங்களினதும் ஆயுதமாகத்திகளும் “காணமல்போதல்” “வௌ்ளைவான்களில் இளைஞர்கள் கடத்தல்” என்பன பெரிதும் பேசப்பட்டுவருவதாகும்.

தற்பொழுது மக்கள் நிம்மதியாக வாழும் இக்கால கட்டத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் நாட்டுப்பற்றற்ற சிலரும் சில அரச சார்பற்ற சில நிறுவனங்களும் இணைந்து தமதுசொந்த இலாபம் கருதி இவ்வாறான பிரச்சாரங்ளை மேற்கொள்வது மீன்டும் ஊர்ஜீதம்செய்யப்பட்டுள்ளது அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இதன் ஓர் அங்கமாக இலங்கை இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தொழிற்படு வரும் சில ஊடகங்கள், அண்மைக் காலமாக ஆட்கடத்தல் மற்றும் காணாமல்போதல் போன்ற செயற்பாடுகளின் பின்னனியில் இராணுவத்தினர் செயற்படுவதாக வதந்திகளைப் பரப்பியும் வருகின்றன.
ஆயினும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் ஐக்கிய ராட்சியம் போன்ற சக்திவாய்ந்த நாடுகள் இவ்வாரான போலிக் குற்றச் சாட்டுக்களை பொருட்படுத்தாது, எமது நாட்டின் அபிவிருத்தயை விரைவு படுத்தவும் முன்வந்துள்ளன.
கடந்த ஜனவரி 06ஆம் திகதி மன்னார் பகுதியில்வெள் ளைவானில் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இதன் உன்மைத்தன்மையை ஆராய பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளக் குழுவினர் மன்னார் சென்று உன்மை நிலையை ஆராய்ந்த பின்னர் இது தவறான பிரச்சாரம் என ஊர்ஜீதமானது.
இவ் ஆய்வின்போது மன்னார் பேசாலை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு கொழும்பில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அனைத்து இளைஞர்களையும் நேரில் சந்தித்து உண்மைத் தகவல்களைப்பெற்றுக் கொன்டுள்ளனர்.
இவ் இளைஞர்கள் விசாரனையின் பின்னர் ஜெசீல் என்பவரின் பெரிய அப்பா திரு ரம்ஸி என்பவரிடம் பொழும்பில்வைத்து ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இது விடயமாக திரு றம்சி என்பர் இவ்வாறு விபரித்தார்
“நான் கொழும்பில் வேலை செய்து வருகின்றேன் எனது தம்பியின் வீட்டுக்கு “நாகொடிக்”இனால் சென்றுள்ளனர் அவர்கள் அங்கு எனது தம்பயைப்பற்றி விசாரித்துள்ளனர் அவர் வீட்டிலில்லாதால் சென்றுள்ளனர். பின்பு எனது தம்பியின் மகன்ஜெலீஸ் அவரது வானில் வந்திருக்கிறார்,அவரிடம் இவர்கள் அடையாளத்தைத் தெரிவித்து அவரது வேனில் வர ஆயத்தமாகையில் அங்கிருந்த உறவினர்களும் பொதுமக்களும் விசானைக்குழுவிரை வழிமறித்து இவர்களது விசானைக்கு இடையூ செய்துள்ளனர் இதனால் அங்கிருந்து கொழும்புக்கு கொன்டுவர அதிகாரிகளுக்கு நேர்ந்த்தாக தெரிவித்தார்.”
மேலும் அவர் விபரிக்கயில் “ கடந்த 07ஆம் திகதி காலை 07 மணிக்கு கலால் வரித்தினைக்களத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது அதில் உங்கள் தம்பியின் மகன் ஜெசில் என்பவரை விசாரனை ஒன்றுக்காக அழைத்து வந்ததாகவும் விசாரனை முடிவடைந்த நிலையில் அவரை வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறினர்.
நான் அங்கு சென்றேன் ஜெசீலுடன் இன்னும் நான்கு இளைஞர்களும் இருந்தனர். ஜெசீல் உட்பட அவர்கள் 5பேரினதும் விசாரனைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் உங்களுடன் இவர்களையும் அழைத்துச் செல்லுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர்.” இவர்கள் ஐந்து பேரும் ஜெசீலின் வானில் ஊருக்கு அனுப்பிவைத்தேன் எனதெரிவித்தார்.
மேலும் அதிகாரிகள் என்னிடம் கூறியதாவது “இவர்களை நாம் போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரிலேயே அழைத்து வந்தோம்.விசாரனையின் பின்னர் மன்னாரிலே விடுவதாக இருந்தோம் எனினும், பொதுமக்கள் இவர்களை இடைமறித்து இடையூறு செய்ததன் காரணமாகவே இவர்கள் கொழும்புனோக்கி அழைத்து வரநேரிட்டதாகத் தெரிவித்த்தாக” என தெரிவித்தார்.
கலால்வரி திணைக்கள அதிகாரிகளால், 500 கிராம் போதைப் பொருளுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது விசாரனையின்போதுகொடுத்த தகவலுக்கு அமைவே இவ்வளைஞர்கள் விசானைக்கு உட்படுத்தப்பட்டதாக கலால் வரித்தினைக்கள அத்தியட்டசகர் திரு பிரபாத் அவர்களிடம் கேட்டபோது தெரிய வந்த்து.
கடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்த பேசாலைப் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதியாக பனிபுரியும் நாகேந்திரன் தர்மராஜை சந்தித்தோம். இவர் கூறியதாவது,
நான் மன்னார் நகருக்கு ஹயர் சென்றிரிந்தேன் அங்கு “கலால்வரி திணைக்கள அதிகாரிகள் தம்மை அடையாளப்படுத்தி தங்களுடைய விசாரனைக்கு உதவுமாறு கூறி தன்னைக் கேட்டனர். அங்கிருந்து எனது பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்து விட்டுஅவர்களுடன் நான் சென்றிருநதேன்.
அவர்களது அலுவலக வாகனமான வெள்ளை வானில் தானும் பேசலைநோக்கி அவர்களுடன் சென்றேன் அப்போது அம்மாவிடம் அப்பகுதிக்கு வருவதாகவும் தொலைபேசியில் தெரிவித்தேன் அவர்களும் அங்கு வந்து என்னும் அதிகாரிகளிடமும் பேசினார்கள். என விபரித்தார்.
இது விடயமாக தர்மராஜின் அம்மாவிடம் கேட்டபோது இவ்வாறு விபரித்தார். “எனது மகன்போதைப் வஸ்து தடுப்பு பிரிவினரால் விசானைக்கு என்னை அழைத்த்தாகவும் தற்போது பேசலைநோக்கி வருவதாகவும் தெரிவித்தார் அங்கு நானும் எனது கனவனும் செனறோம் அவர்கள் எனது மகனுடன்பேச அனுமதித்த்துடன் தாங்ளைப் பற்றியும் அறிமுகம் செய்தனர் பின்பு விசானையின் பின்பு அரை அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.
அவ்வாறு இருக்கயில் அவ்விடத்தில் முஸ்லீம் நபர் ஒருரை கைது செய்ததினால் அங்கு குழுமியிருந்த அவர்களது உறினர்கள் அவர்களது வாகனத்தை வழிமறித்து இடையூறு பன்னியதால் வாகனம் அங்கிருந்து சென்றது தானும் எனது கனவரும் வீட்டுக்கு வந்தோம் மறு நாள் எனது மகன் வீட்டுக்கு வந்திட்டாரு.”
இரண்டாவது நபரான தையற்காரர் அன்டனி விசாரித்போது.
“நான் வீட்டிலிருந்து எனது கடைக்குசெல்லும் வேளை அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்தனர் தம்மை “நாகொடிக்” எனஅடையாளப்படுத்தி விசாரனை ஒன்றுக்காக என்னை அழைத்தனர், அவ்வேளை தனது மனைவி ஓர் அலுவல் காரணமாக வெளியே சென்றிருந்தார்.எனவே அவரிடம் அறிவித்து விட்டுச் செல்வதற்காக அவர் வீடு திரும்பும் வரை காத்திருந்தனர், அவர் வர நீண்ட நேரம் சென்றமையால், தொலைபேசி மூலம் அவருக்கு தெரியபடுத்திய பின்பு தன்னை விசாரனைக்கு அழைத்து சென்றனர்”என கூறினார்.

அடுத்ததாக கமல் என்பவரை நாம் சந்தித்து இது தொடர்பாக வினவினோம். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் எனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த வேளை கலால்வரி திணைக்கள அதிகாரிகள் தம்மை வீட்டில் உள்ளவர்களுக்கு அடையாளப்படுத்தி, விபரத்தை கூறி தன்னை விசானைக்கு என அழைத்தனர் ”என கூறினார்
பின்பு அவரது மனைவி தெரிவிக்கயில் “நாங்கள் வீட்டிலிருக்கும் போது அதிகாரிகள் தங்கள் அடையாளங்ளை என்னிடமும் எனது மாமா அத்தை எல்லோருடனும்தெரிவித்தனர் பின்பு அரைக்கூட்டிச் சென்றனர். பின்பு அவர் மறுநாள் வீட்டுக்கு வந்துட்டாரு.”

பின்னர் ஜசீல் என்பவரை சந்தித்தோம்.இது தொடர்பில் அவர் கூறியதாவது “நான் எனது வானில் வந்துகொண்டிருந்தேன்.அவ்வேளை அதிகாரிகள் என்னை வழி மறித்தனர் பின்பு என்னிடம் பேசவேன்டும் என தெரிவித்தனர் நான் கேட்டேன் நீங்கள் யார் உங்ளை எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தேன் அப்போது தனது அடையாள அட்டயைக் கான்பித்து அவர்களை உறுதி செய்தனர் பின்பு அவர்களுடன் எனது வெள்ளை வானில் அவர்களுடன் வர முற்படகையில் அங்கு இருந்த எனது உறவினர்கள் நன்பர்கள் வானை விடாது வழி மறித்தனர். இதனால் அங்கு சற்று பதட்டம் நிலவியது, அதிகாரிகளுக்கு அங்கு கடமைக்குக்கு இடையூறு விளைவித்ததினால் அங்கிருந்து கொழும்புக்கு கொன்டுவர நேரிட்டது.”என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலால்வரி திணைக்கள அத்தியட்சகர் திரு.பிரபாத் கூறியதாவது,
மதவாச்சிப் பகுதியில் 500கி ஹரோயினுடன் கைபற்றிய சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்டையில் இவர்ளை கைது செய்தோம் இவர்களது கைதின்போது தாங்கள் எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதுடன் அவர்களது உறவினர்களிடம் தெரியப்படுத்தி நீதியான மறையில்தான் கைது செயதோம்.

ஆனால் ஜெலீஸ் என்பவரின்கைதின் போது அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை காரனமாக அவர்ளை கொழுப்புக்கு அழைத்து வரநேரிட்டது. இவர்களில் போதுமான சாட்சி இருப்பவர்களுக்கு எதிராக நீதிவிடமாக வழக்கு தொடர்பதுடன் மற்றவர்கள் விடுவிக்கப்டுவர். எனதெரிவித்தார்.
 நன்றி; vidivi.lk (17.1.2011)

0 comments:

Post a Comment